சேலம் மேற்கு மாவட்டத்தில் செப்.17, 2011 - பெரியார் 133-வது பிறந்தநாள் விழா, இரு சக்கர வாகனப் பேரணியாகச் சென்று கொடியேற்று விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் தலைமை யில் 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஒரு குழுவும், மாவட்ட செயலாளர் சூரியகுமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இரண்டாவது குழுவும், காவலாண்டியூர் ஈசுவரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மூன்றாவது குழுவும், சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன. மூன்று குழுக்களிலும் ஒலி பெருக்கி கட்டிய ஆட்டோக்கள் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு, அய்யா பிறந்த நாள் பற்றியும், தூக்கு தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் தலைமை யில் புறப்பட்ட குழு முதலில் மேட்டூர் சமத்துவபுரம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு புறப்பட்டது. மல்லியருந்தத்தில் மாரிமுத்துவும், மேச்சேரியில் தமிழரசனும், அகரம் பகுதியில் மேச்சேரி சூரியும், நங்கவள்ளி கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில் தொழிற் சங்கம் சார்பாக சிவக்குமார், நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருட்டினன், வனவாசி பனங்காட்டில் செந்தில், குஞ்சானூர் கெம்பிளாஸ்ட் நிறுவனம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திவேல், ராமன் நகர் பகுதியில் ஜம்பு, சாம்பள்ளி பகுதியில் முருகேசன், மேட்டூர் ஆர்.எஸ் பகுதியில் பகுதி செயலாளர் கண்ணன், தேசாய் நகரில் ரகு, என்.எஸ்.கே. நகரில் சுகுமார், ரயில் நிலையம் அருகில் நாகராசு, தங்கமாபுரி பட்டணத்தில் பிரபு, சேலம் கேம்ப் படிப்பகம் அருகில் சந்தோசு குமார், சேலம் கேம்ப் பேருந்து நிலையத்தில் குமரேசன், மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், காவேரி நகர் புதிய கிளையில் ரத்தினசாமி, மாதையர்குட்டையில் பழனிசாமி, கபிலன், பெரியார் தெருவில் குமார், புது குவாட்ரஸ் பகுதியில் ரவி, காவேரி நகர் பகுதியில் பழனி, சின்ன பார்க் பகுதியில் கோவிந்தராசு, பெரியார் நகர் பகுதியில் கண்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் நகரில் நகர பொருளாளர் கதிரேசன், திலீபன் நகர் பகுதியில் மேட்டூர் நகர தலைவர் பாஸ்கர், பொய்கை யில் முன்னாள் மாவட்ட தலைவர் மாந்தன், குமரன் நகரில் மோகன், மேட்டூர் சதுரங்களூரில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கோவிந்தன், மேட்டூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஓவியர் குறட்பா, மேட்டூர் பெரியார் படிப்பகம் அருகில் மாவட்ட பொருளாளர் ஆசைத் தம்பி ஆகியோர் கழகக் கொடிகளை ஏற்றி வைத் தனர். மாலை 5.30 மணிக்கு மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை நன்றி கூற, வாகன பேரணி நிறைவுற்றது.

மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் புதிய கிளை

மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் பெரியார் பிறந்த நாளில் கழகத்தின் புதிய கிளை துவக்கப்பட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. தோழர் ரத்தினசாமி கழகக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் முல்லை வேந்தன் பெரியார் தொண்டர்களின் உழைப்பைப் பற்றியும், பெரியார் திராவிடர் கழகம் ‘ஏன் தேவை’ என்பது பற்றியும் உரையாற்றினார். ரத்தினசாமி முயற்சியால் தோழர்கள் மகேந்திரன், சுந்தரம், ஆறுமுகம், இராசா ஆகியோர் புதிய கிளையில் இணைந்துள்ளனர். முன்னதாக காவேரி கிராஸ் ஊர் எல்லையில் வாகனப் பேரணியை பறை முழக்கம், தாரை தப்படையுடன் மிகச் சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.

செய்தி : முல்லை வேந்தன்.

சங்கம்பாளையம் சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்த நாள்

பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 17.09.2011 காலை 10 மணிக்கு சாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியவர் திருமூர்த்தி தலைமையில் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடை பெற்றது. சாதி ஒழிப்புப் போராளிகள் ஆறுமுகம், காளிமுத்து மற்றும் கழகத்தின் கோட்டூர் ஆதி, ஆனைமலை முருகானந்தம், ருக்குமணி, ராம கிருட்டிணன், கோபால், தமிழரசன், பூங்குழலி, மக்கள் விடுதலை முன்னணி பொறுப்பாளர் மாரிமுத்து, கண்மணி, தம்பு ஆகியோரும், நாற்றங்கால் கல்வி அறக்கட்டளை விசுவநாதன், மணிமுத்து, கணேசன், இசைப்பிரியா, செங்கொடி, அங்கயற்கண்ணி மற்றும் ஏராளமான சமத்துவபுர பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Pin It