சிங்கள ராஜபக்சேயின் குரலை பார்ப்பன ‘இந்து’ ராம் கும்பலோடு இணைந்து தமிழக மேடைகளில் அ.மார்க்ஸ் ‘முழங்கி’ வருகிறார். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழும் மனித படுகொலைகளை கண்டிப்பதை விட, தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரை குற்றக் கூண்டில் நிறுத்துவதும், கேலி கிண்டல் செய்வதுமே இவரது முழு நேர பணியாகி விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

காஷ்மீர் வரை போய் அங்கே மனித உரிமை மீறல்களைக் கண்டு குரல் கொடுப்பவர்கள், ஈழத்தில் நடக்கும் மனித படுகொலைகளை கண்டு மகிழ்ச்சி கூத்தாடுவது ஏன்?

மனித உரிமை பேசுவதிலும் பார்ப்பனீயமா? இவர்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?


பெரியார் கருத்தை தடுப்போருக்கு பெரியார் விருது?

கேள்வி: தந்தை பெரியார் விருதுக்கு வீரமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பற்றி?

பதில்: பெரியாரின், குடிஅரசு இதழில் வெளியான கருத்துக்களை தொகுத்து வெளியிட முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தினரை எதிர்த்தும், தடுத்தும் நீதிமன்றத்தில் தடை ஆணை கோரி வழக்கு தொடர்ந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். நீதிமன்றம் இந்த விவகாரத்தில், சரியான குட்டு வைத்து பெரியாரின் கருத்துக்களை வெளியிட தடையில்லை என்று கூறிய பிறகும், மீண்டும் பெரியாரின் கருத்து தொகுப்பு வெளியே வந்து விடவே கூடாது என்று மன உறுதியுடன் மீண்டும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆக!... பெரியாரின் கருத்துக்கள் வெளிவரவே கூடாது என்கிற கருத்து, பெரியாரின் சீடரான கலைஞர் கருணாநிதிக்கு பிடித்துப் போனதால் ஒரு வேளை தேர்ந்தெடுத்திருக்கலாம். பெரியாரின் கருத்துக்களை தொகுத்து வெளியிடலாம் என்று ஆணை பிறப்பித்த நீதிபதிகள் வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ன...!

- ‘அரசியல் ஒற்றன்செப். 2009 மாத இதழில் ஆசிரியர் கே.வீ. சௌந்தர்

Pin It