மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நாகரிகச் சமூகத்தின் அவலமாய் ஆணவப் படுகொலை: சட்டத்தில் வெற்றிடம்

நாகரிகச் சமூகத்தின் அவலமாய் ஆணவப் படுகொலை: சட்டத்தில் வெற்றிடம்

நவீன உலகில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், வெளியுறவுகளிலும் இந்தியா புதிய உயரங்களை எட்டியுள்ளது வெள்ளிடைமலை. ஆனால், இதற்கு நே...

தடை, அதை உடை!

தடை, அதை உடை!

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! "நாமெல்லாம் ஒன்று" இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப...

வி.பி.எஸ்.ஏ. ஆபத்து

வி.பி.எஸ்.ஏ. ஆபத்து

உயர் கல்வியை முழுமையாக மாநிலக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து தனது ஆளுகைக்குக் கீழே கொண்டு வரும் மசோதா ஒன்றை ஒன்றிய ஆட்சி 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் க...

அச்சுறுத்தலிருந்து பாதுகாப்பளிக்கும் பாடங்கள்

அச்சுறுத்தலிருந்து பாதுகாப்பளிக்கும் பாடங்கள்

‘திடீரென்று கடந்த காலம் மிகத் தொலைவில் புதைக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றவில்லை. அத்தோடு எதிர்காலம் அமைதியாகச் சிந்திக்க முடியாதவாறு மிகவும் இருண்டதாக உள்ளது.’ அது நூ...

அண்ணல் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள் - 2

அண்ணல் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள் - 2

(அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பின் பொருளாதாரம் என்ற பொருண்மையின் (தொகுதிகள் 28 முதல் 33 வரை) அறிமுகக் கட்டுரை) சென்ற இதழின் தொடர்ச்சி... அண்ணல் அம்பே...

அறிவாயுதம் ஏந்திய புரட்சியாளர்

அறிவாயுதம் ஏந்திய புரட்சியாளர்

சே குவேராவைப் பற்றி அவரது தந்தை எர்னஸ்டோ ஏராளமான செய்திகளையும் தகவல்களையும் அவர் அளித்த நேர்காணல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அவரின் குழந்தைப் பருவம் மற்றும் ம...

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில்...

ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!

ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!

விஞ்ஞானிகள் பழ ஈக்களில் ஆண் உயிரினங்கள் இல்லாமலேயே, கன்னி இனப்பெருக்க முறையில் (Parthenogenesis) புதிய உயிரினங்களை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மரபணு முறையில் கை...

ஜஸ்டிஸ் கட்சியும் சு.ம. இயக்கமும்

ஜஸ்டிஸ் கட்சியும் சு.ம. இயக்கமும்

தியாகராய நகரில் சு.ம. பொதுக் கூட்டம் அடிப்படையான கொள்கையில் இரண்டும் ஒன்று எனவே சுயமரியாதைக்காரர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவேண்டும் சுயநலக்காரர்களுக்கு இனி ஜஸ்டிஸ...

நாகரிகச் சமூகத்தின் அவலமாய் ஆணவப் படுகொலை: சட்டத்தில் வெற்றிடம்

நாகரிகச் சமூகத்தின் அவலமாய் ஆணவப் படுகொலை: சட்டத்தில் வெற்றிடம்

நவீன உலகில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், வெளியுறவுகளிலும் இந்தியா புதிய உயரங்களை எட்டியுள்ளது வெள்ளிடைமலை. ஆனால், இதற்கு நே...

தடை, அதை உடை!

தடை, அதை உடை!

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! "நாமெல்லாம் ஒன்று" இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப...

வி.பி.எஸ்.ஏ. ஆபத்து

வி.பி.எஸ்.ஏ. ஆபத்து

உயர் கல்வியை முழுமையாக மாநிலக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து தனது ஆளுகைக்குக் கீழே கொண்டு வரும் மசோதா ஒன்றை ஒன்றிய ஆட்சி 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் க...

அச்சுறுத்தலிருந்து பாதுகாப்பளிக்கும் பாடங்கள்

அச்சுறுத்தலிருந்து பாதுகாப்பளிக்கும் பாடங்கள்

‘திடீரென்று கடந்த காலம் மிகத் தொலைவில் புதைக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றவில்லை. அத்தோடு எதிர்காலம் அமைதியாகச் சிந்திக்க முடியாதவாறு மிகவும் இருண்டதாக உள்ளது.’ அது நூ...

அண்ணல் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள் - 2

அண்ணல் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகள் - 2

(அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பின் பொருளாதாரம் என்ற பொருண்மையின் (தொகுதிகள் 28 முதல் 33 வரை) அறிமுகக் கட்டுரை) சென்ற இதழின் தொடர்ச்சி... அண்ணல் அம்பே...

அறிவாயுதம் ஏந்திய புரட்சியாளர்

அறிவாயுதம் ஏந்திய புரட்சியாளர்

சே குவேராவைப் பற்றி அவரது தந்தை எர்னஸ்டோ ஏராளமான செய்திகளையும் தகவல்களையும் அவர் அளித்த நேர்காணல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அவரின் குழந்தைப் பருவம் மற்றும் ம...

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

விஜய் பேச்சும் நீரோ மன்னரும்!

முதலமைச்சர் விஜய் கரூர் பேச்சு ஒரு முதலமைச்சர் தகுதிக்குரிய பேச்சாக இல்லை.மாறாக ஏதோ படை எடுத்து வந்து தமிழ்நாட்டைப் பிடித்து மன்னர் ஆகிவிட்டது போன்ற மனநிலையில்...

ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!

ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!

விஞ்ஞானிகள் பழ ஈக்களில் ஆண் உயிரினங்கள் இல்லாமலேயே, கன்னி இனப்பெருக்க முறையில் (Parthenogenesis) புதிய உயிரினங்களை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மரபணு முறையில் கை...

ஜஸ்டிஸ் கட்சியும் சு.ம. இயக்கமும்

ஜஸ்டிஸ் கட்சியும் சு.ம. இயக்கமும்

தியாகராய நகரில் சு.ம. பொதுக் கூட்டம் அடிப்படையான கொள்கையில் இரண்டும் ஒன்று எனவே சுயமரியாதைக்காரர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவேண்டும் சுயநலக்காரர்களுக்கு இனி ஜஸ்டிஸ...

கீற்றில் தேட...

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...

தனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...

palanibaba_340கண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா.

"நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல..." என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையைத் துறந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து களமாடினார் பழனிபாபா.

ஆம். பார்ப்பனியம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி; ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்திய நாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாள‌க்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார். விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கப்படாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார் பழனிபாபா. கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்.

ஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்குத் தனி இடமுண்டு. அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை. ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்டத் துவங்கினார். சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் "முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம்" என்றார். அதனை வன்மையாகக் கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துக்கொண்டார்.

தனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார். விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளினால் பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார். இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாகக் களமாடினர். எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திமுகவின் துரோகம், அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கைகோர்த்தார். அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாகக் கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பைப் பெற்றார்.

மருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது. வடக்கே வன்னியர்கள்... தெற்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைப் பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான். முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா. பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெறக் காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டவர். எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா...

சமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள், பார்ப்பனர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை. தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள். வழக்கப்படியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு... இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் இழைத்தது. எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார். காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார். பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது.

மாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைப்பட்டால் வெளிப்படுத்துவோம். தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திக்கொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும் என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்.

முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார். முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார். தனது திட்டங்களை சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள்; இணைந்து களமாட தயாரானார்கள். தலித் மக்களை சந்தித்தார். இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார். தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்கத் தயாரானார்கள். தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வெண்ணை திரண்டு வந்தது; ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.

ஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒருங்கிணைந்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது. பழனிபாபா என்கிற மாமனிதன், தனிமனிதப் போராளி படுகொலை செய்யபட்டார். சுமார் 238 வழக்குகள், 136 கைதுகள், 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒரு மாவீரன் கோடாளிகளால் குடல்சரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தடா வழக்குகளில் சிறைபடுத்தப்படாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..
.
பழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைத்தோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிப் போய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபாவை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்...

பழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம். இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கைப் பிரகடனம்... ஏற்க மறுப்பது அறீவீனம்...

மனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தந்தை பெரியாரை, அடிமை விலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- வேங்கை.சு.செ.இப்ராஹீம்

Comments

27 comments

27
ச. நாசர்தீன்
பழனிபாபா வாசிக்கப்படவேண்டிய வரலாறு
அல்ல ?
நெசிக்கப்பட வேண்டிய வரலாறு இவர்.....
ச. நாசர்தீன்
எங்கள் அண்ணன் வேங்கை.சு.செ.இப்ராஹீம் அவர்களுக்கு இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
மதுரை பாண்டி
வேங்கை அவர்களே...இந்த வரலாறு தவறு.
நிறையா செய்திகளை நீங்கள் மறைத்துள்ளிர்கள் கடைசியாக பாபா புதுக்கோட்டை பொதுகூட்டம் நடைப்பெற்றது.அதில் பாபா எடுத்த முடிவு என்ன?
திருமாவளவன்னும் பாபாவும் சந்தித்கொண்டர்களா...? அது எப்போ என்று தெரியப்பாடுத்தாவும்....
தமிழன் வேலு
அருமையான கட்டுரை.. மறைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவரும். அதுபோல பழனிபாபா எனும் உண்மை எழுச்சித்தமிழரின் மூலம் தமிழக மக்களுக்குப் புலப்படும் என்பதில் மாற்றமில்லை... தம்பி மதுரை பாண்டி புதுக்கோட்டை நிகழ்வு சிறுத்தையின் குகையில் சிங்கத்தின் சீற்றம் என்ற தலைப்பில் அரங்கேற இருந்தது.. அரசின் சார்பில் ஏராள தடைகள் அதனால் அதில் பாபா அவர்களால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது...
தமிழகமக்கள்ஜனநாயகட்சி புதுக்கோ
புதுக்கோட்டையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் பாபா இதுதான் நான் பிற கட்சியின் மேடையில் ஏறும் கடைசி கூட்டமாக இருக்கட்டும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் இனைந்து அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அது ஒரு பொது பெயரில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேரள சென்று போராளி அப்துல்நாசர் மாதனொயை சந்தித்து விட்டு டெல்லி சென்று மக்கள் ஜனநாயக கட்சி என்று பதிவு செய்ய வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருக்கும் போதுதான் பாபா கொல்லப்பட்டார் என்ற வரலாற்றை கட்டுரையாளர் வசதியாக மறைத்து விட்டது ஏனோ..? இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் பழனிபாபா என்ற ஆளுமை மறு வாசிப்பு செய்து கொண்டு அவரின் கொள்கைகளை முன்னேடுத்து கொண்டு செல்லும் வேலையில் அந்த எழுச்சியை திருமா போன்றவர்களிடம் அடகுவைக்க முயற்சிப்பது வரலாறு உங்களை மண்னிக்காது. அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு இயக்கத்தை ஆதரிப்பதும் அதை கொண்டுபோய் இன்னொரு இடத்தில் அடகு வைப்பதும் என்ன பிழைப்பு...?
cumbum viji
பழனி பாபா எம்ஜிஆருக்கு சவல் விட்டவர் தான் ஆனல்
வரலார் முழுமயாக இல்லை. நிறய மறைக்கப்பட்டு
உள்ளதது.
சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் தியாகங்களை மறைத்து திட்டங்களை மறைத்து வேறொருவருக்கு வழி ஏற்ப்படுத்திதரவேண்டி இக்கட்டுரை பதிவு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக தோழர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்... கட்டுரையில் பாபா அவர்களின் அரசியல் சமூக திட்டங்களை மட்டுமே நாம் பதிவு செய்துள்ளோம்... பாபா அவர்களுடம் இணைந்து களமாடியவர்களின் விளக்கத்தை நாம் பதிவு செய்யவில்லை அப்படி பதிவு செய்யவேண்டுமானால் மருத்துவர் அய்யா சேப்பன் முதல் பேராசிரியர் அய்யா தீரன் வரையும் நாம் பதிவு செய்தே ஆகவேண்டும்... பாபா அவர்கள் மற்றவர்களை நம்புவதைவிடவும் பொதுவான அரசியல் கட்சியை நாமே துவங்கிடலாம் என்கிற நோக்கத்துடன் அண்ணன் சரீப் பெரியவர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் போன்றவர்களுடன் ஆலோசனை நடத்தியதை மறைக்க வேண்டியது இல்லை...

ஆனால் பாபா அவர்களின் திட்டங்கள் ஏன் கிடப்பில் போடப்பட்டது...? அதற்க்கு தடையாக என்ன வந்தது... இவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா...? இவ்வளவு ஏன் பாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அந்த அடக்குமுறையான காலகட்டத்திலும் ஜிஹாத் கமிட்டியின் தலைமை பொறுப்பை துணிவுடன் ஏற்றுக்கொண்ட சகோதரர் காரைக்குடி நவ்ஷாத் அவர்களையும் அவ்வேளையில் பொதுசெயலாளராக பொறுப்பேற்று செயலாற்றி சுமார் பதினான்காண்டுகால சிறைவாசத்தை அனுபவித்த சகோ."தடா' ரஹீம் பெரியவர் குணங்குடி ஹணிபா ஆகியோரையும் நாம் மறந்துவிட முடியாது...

ஆக கட்டுரையின் நோக்கம் பாபா அவர்களின் அரசியல் நடைமுறை பன்முக சமூக மக்களுடன் இணைந்து களமாடியது போன்ற நிலைகளை தற்போதைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதுதானே தவிர சிலருக்கு சிவப்புகம்பலம் விரித்தும் சிலருக்கு இருட்டடிப்பு செய்தும் உண்மைகளை மறைக்கவேண்டும் என்பதல்ல... இப்படியாக நம்மிடையே புரையோடி போயுள்ள முரண்பாடுகளை கலைந்து ஒருங்கிணைத்து பாபா அவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வலியுறுத்துவதே எமது கட்டுரையின் நோக்கம்... என்பதை ஆணித்தரமாக பதிவுசெய்கிறேன்... நன்றி
tamilselvam
விரைவில் புதிய மக்கள் ஜனநாயக கட்சி தமிழகத்தில் தொடங்கா உள்ளோம் உங்களை அனைவரையின் கருத்துகளை வரவேற்கிறோம்.
மதுரை பாண்டி
பாபாவின் லச்சியம் நிறைவேறாபோகுது நிச்சியம்.

விரைவில்

தமிழகத்தில் மிக பெரிய எழுச்சியில் ஒரு கட்சி

இது பாபாவின் மீது சத்தியம்...
Asraf
பாபா.....சினிமா சினிமா

நம் நடை கண்டு அகஙகாரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
ibrahim chennai
பழனி பாபா என்ற பெயரை உச்சரிக்கும் பொது, எனக்கு உள்ளே ஓர் தைரியம், ஓர் வெறி,ஓர் கொள்கை உரு எடுக்கின்றது,மேலும் அவர் எங்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும் உண்மையான முஸ்லிம்,நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்களுக்கு இவர் ஓர் ஊக்க மருந்து, அல்லாவின் தூதரை பின்பற்றுபவர்கள் அனைவரும் என் சகோதரர்கள், அந்த வகையில் இவர் எனக்கு பிடித்த ஒரு நல்ல சகோதரர் பழனி பாபா, அவரை போல் நாமும் அல்லாவை மட்டும் வணங்கி அல்லாவின் தூதர் முகம்மதின் வழியை மற்றும் பின் தொடரும் நிலையில் வாழ்ந்து மறையும் முஸ்லிமாய் என்னையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக,ஆமீன்
A.MOHAMED ABDUL KADER
வேங்கை அவர்களே பாபாவின் வரலாற்றை முழுமையாக தெரிந்துகெள்ள உதவுங்கள.
syed mohamed
saheed palani baba avarhalay pol intru eanta naam iyyakatalayvarhalum illay. Eallorum suyanala vathihal . Araciyal pannuhirarhal.
Ya allahu ivaray pol oru veeraray eamaku taruvayaha...
syed sahul
assalamu alaikum
sagothargalae if jihad committee and makkal jananaayaga katchi ll come inshallah allah give as more strength so please do it. but our attitute must be like saheed alhaj dr palani baba.
Guest
நாங்கள் உன்னைப்போல் ஒரு மாவீரனை கண்டதில்லை இனியாவது உன்னைப்போல் உள்ள ஒரு போராளியை அல்லாஹ் எங்களுக்கு தருவான் இன்ஷாஅல்லாஹ்
மல்லர்
இப்ராகிம் அண்ணா தலித் தாழ்த்தப்பட்டவர் என்ற வாரர்த்தையை எடுத்துவிட்டு மள்ளர\பள்ளர் என்று பதிவிடுங்கள்
வீ. குபேந்திரன்
நான் ஒரு இந்து. பழனி பாப்பா போன்ற உண்மையான, உத்தமனான,சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத, ஆதாரத்துடன் பேசும் வள்ளமைபெற்ற, ஒரு அறிவாளியை, ஒரு போராளியை, ஒரு சிறந்த பேச்சாளரை மற்றும் என்னைபோன்ற இந்துகளையும் கவரகூடிய ஒரு மனிதரை இதுவரை நான் கண்டதில்லை. அவர் இறந்தபிறகுதான் அவர் புகழும் மற்றும் அவர் செய்த நற்காரியம், தியாகம் தெரியவந்தது.
ஹபிப்
தற்போது பழனி பாபா வுடன் முஸ்லிம்களுக்காக உயிர் தியாகம் செய்த வரிசையில் மதுக்கூர் மைதீன் வந்து விட்டார்
selvam k
ஒரு வீரபோராளியை,நெசிக்கப்பட வேண்டிய வரலாற்று பதிவு.
M.ANVAR BATCHA
[i]பதிவு அருமை ஆனால் இந்த பதிவை பதிவு செய்த அண்ணன் வேங்கை அவர்கள் பழனிபாபா அவர்களின் கொள்கையில் உள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது [/i]
MOHAMED BASITH
பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை.. இந்த இடத்தை நன்றாக கவனிக்கவும். எழுத்துப்பிழை உள்ளது. திருத்தும் சேஹ. மீள்பதிவு இடுக. அதாவது பழனிபாபா என்ற ஆளுமையற்ற என்பது உங்கள் தவறு.பழனிபாபா மாபெரும் ஆளுமை உள்ளவர்.
Fredric
Bro. Palani Baba was a good man. I am Christian. Since 1980, I liked him and his speech.
வில்லவன் வி
வாழ்நாள் முழுவதும் நேர்மையாக வாழ்ந்து காட்டிய தமிழர் உயர்திரு மாண்புமிகு ஐயா. பழனிபாபா அவர்களின் உரையை கேட்ட பின்புதான் நீண்ட காலமாக என் முஸ்லிம் சகோதரர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியாவெங்கும் பரப்பி அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து செயல்பட்டதன் உள்நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது,
என் வயது 32, சிறுவயதிலிருந்து நான் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அப்படி வாழ்ந்து மறைந்த ஒரு தலைவரை பார்த்ததில்
அளவு கடந்த மகிழ்ச்சி
suresh
arumai
முகமது சாகுல்
இவர் போன்ற தலைவர் இப்பொழுது நம் சமுகத்தினருக்கு இல்லை என்பது மனம் வலிக்க தான் செய்கிறது.
முபாரக் அஹமத்
பழனிபாபா இருந்த சமயத்தில் நான் இப்போதைய வயதில் இருந்திருந்தால் சந்தோஷம் அடைந்திருப்பேன், அவர் வார்த்தைகள் உண்டு அதுவே சந்தோஷம் எனக்கு.
Siyaan
அண்ணன் திரு.திருமாவளவன் அவர்கள் மற்றும் பழனி பாபா அவர்கள் இடையே என்ன தொடர்பு என்பதை சரியாக குறிப்பு இல்லை. ஏன்?

Leave a comment

Fields marked with * are required.