உலகம் முழுவதும் துருக்கியின் ஹிட்டைட் நாகரிகத்தில் கி.மு. 1350 வாக்கில் முதல் முதலாக இரும்பை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது எனவும், அங்கிருந்துதான் உலகம் முழுவதும் அத்தொழில்நுட்பம் பரவியது எனவும், இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கூட அங்கிருந்துதான் அத்தொழில்நுட்பம் வந்து சேர்ந்தது எனவும் கருதப்பட்டது. மேலும் இரும்புத் தொழில்நுட்பத்தைக் கொண்ட இரும்புக்காலம் என்பது பெரும்பாலான நாடுகளில் கி.மு. 1000-க்குப் பின்னர்தான் தோன்றியது. ஆனால் பழந்தமிழகத்தில் கி.மு. 3300-க்கு முன்பே இரும்புக்காலம் தோன்றிவிட்டது. அதாவது துருக்கி நாட்டுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்புக்காலம் தோன்றிவிட்டது. ஆகவே உலகில் தமிழர்கள்தான் முதன்முதலில் இரும்பை உருக்கி இரும்புப் பொருட்களை உற்பத்தி செய்தவர்கள் என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அருகே உள்ள சிவகளையில் 2023 (ஜூலை) ஆம் ஆண்டு நடந்த அகழாய்வில் வாள்கள், கூர்முனைக் கருவிகள், கத்திகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இரும்பு ஆயுதங்கள் கிடைத்தன. அவற்றின் காலம் குறித்த ஆய்வுக்காகப் பல ஆய்வு நிலையங்களுக்கு அவை அனுப்பப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ்நாட்டின் இரும்புக்காலம் கி.மு. 3345 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவியல் அடிப்படையில் கண்டறிந்த ஆய்வு முடிவுகள் கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளன. ஆகவே பழந்தமிழகம் 5000 ஆண்டுகள் பழமையான இரும்புக்கால நாகரிகத்தைக் கொண்டவர்கள். சிரியாவின் 'டமாஸ்கஸ் வாள்கள்' அவற்றின் அதிக வலிமை, வளைந்துகொடுக்கும் தன்மை, கூர்மை போன்றவற்றுக்காக உலகப் புகழ் பெற்றவை. இந்த டமாஸ்கஸ் வாள்கள் உருக்கு இரும்பில் (Wootz Steel) இருந்துதான் தயாரிக்கப்பட்டன. இந்த உருக்கு இரும்பு தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு இரும்பு உருக்குக் கட்டிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டன. அதைக்கொண்டுதான் இந்த டமாஸ்கஸ் வாள்கள் செய்யப்பட்டன. இவற்றை ஆய்வு செய்து அவை தமிழகத்தின் உருக்கு இரும்பில் இருந்துதான் தயாரிக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. பழந்தமிழகத்தில் இருந்து தரமான இரும்பு இறக்குமதி செய்யப்பட்டது என கிரேக்க உரோம ஆசிரியர்களின் குறிப்புகள் கூறுகின்றன.
பழங்கால இரும்பு உளி ஒன்று கி.மு. 2570 ஆம் ஆண்டைச் சேர்ந்த கஃப்ரே (Khafre) என்ற எகிப்திய மன்னரின் பிரமிடில் கிடைத்துள்ளது.
|
இடம் |
ஆய்வு நிறுவனம் |
மாதிரி எண் |
கணக்கிடப்பட்ட காலம் |
பகுப்பாய்வு முறை |
|
சிவகளை |
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
Beta 583593 |
கி.மு. 3345 |
AMS |
கி.மு. 2500 வாக்கில் துருக்கியை ஆண்ட ஹிட்டைட் அரசர் ஒருவனின் கல்லறையில் தங்கக் கைப்பிடியை உடைய இரும்பு வாள் ஒன்று கிடைத்துள்ளது. அதுபோன்றே கி.மு. 14 ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர் துத்தான்காமூனின் (Tutankhamun) கல்லறையிலும் இரும்பு வாள் ஒன்று கிடைத்துள்ளது. கல்லறையில் கிடைத்த உளி, சேலம் கஞ்சமலைப் பகுதியில் கிடைத்த இரும்பு எனவும், இரும்பு வாள்களும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே மிகப்பண்டைய காலத்தில் இருந்து வார்ப்பு இரும்பு, உருக்கு இரும்பு, உளி, வாள் போன்ற இரும்புப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இரும்புத் தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது, உலகின் பெரும் துறைமுக நகரங்களை, உலகின் பெரும் கப்பல்களைக் கட்டிப் பராமரிப்பதிலும் அவற்றை இயக்குவதிலும் பருவக் காற்றை, கடல் நீரோட்டத்தை, ஓதம் எனப்படும் கடலில் ஏற்படும் உயர்வு தாழ்வைப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் மணிக்கற்கள் செய்தல், ஆடை நெய்தல், சங்கு அறுத்தல், நீர்ப்பாசனம் போன்றவற்றிலும் அவர்கள் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
தொழில்நுட்ப மேன்மையின் காரணமாகத்தான் கி.மு. 600 முதல் கி.பி. 200 வரையிலான 800 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக உலகளாவிய அளவில் பேரளவில் வணிகம் செய்தவர்களாகவும், அதன் மூலம் பெரும்பொருள் வளமும் செல்வ வளமும் கொண்ட, உலகின் முன்னணிச் சமூகமாகவும் பழந்தமிழர்கள் இருந்தனர்.
- கணியன் பாலன்