வழங்கப்பட்ட உரையில் உள்ள எழுத்துப்பிழைகள், தவறான சொற்சேர்க்கைகள் (spacing errors), மற்றும் வாக்கிய அமைப்புப் பிழைகள் ஆகியவை சீரமைக்கப்பட்டு, சொற்கள் தெளிவாகப் பிரிக்கப்பட்டு கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளன:
சென்ற பிப்ரவரி 28ஆம் நாள் இஸ்ரேலும் அமெரிக்க வல்லரசும் ஈரான் மீது கொடும் போர் தொடுத்த போது, மூன்று நோக்கங்கள் அறிவிக்கப்பட்டன:
- ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தல்;
- ஈரானின் அணுவாயுத மற்றும் ஏவுகணை வல்லமையை அழித்தல்;
- ஹமாஸ் (காசா), ஹிஸ்புல்லா (லெபனான்), ஹவுதி (யேமன்) போன்ற போராளிக் குழுக்களுக்கு ஈரான் அளித்து வரும் ஆதரவை நிறுத்தச் செய்தல்.
இடையிடையே போர் நிற்பதும் தொடர்வதுமாக நூறு நாள் கழிந்தபின் இப்போது (ஜூன் 15) போர் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இந்த மூன்று நோக்கங்களும் அடையப்பட்டிருந்தால் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்று விட்டதாகச் சொல்லலாம். இல்லையென்றால் ஈரான் வெற்றி பெற்றிருப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கும்.
போர் தொடங்கிய நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் அயதொல்லா அலி காமெனி உள்ளிட்ட அவர் குடும்பத்தினரும் முதன்மையான ஆட்சித் தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டதோடு, 170க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகளும் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இதனால் ஈரானில் ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான ஆட்சிக் கொள்கையிலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, இந்தப் போரினால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், இஸ்ரேலியப் பிரதம அமைச்சர் நெத்தன்யாகுவுக்கும் அவரவர் நாட்டில் எதிர்ப்பு வளர்ந்து முற்றி, விரைவில் இந்த இருவரின் பதவிக்கும் ஆபத்து வந்தால் வியப்பதற்கில்லை. நெத்தன்யாகு தானே தனது அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதிக் கொண்டு விட்டார் போல் உள்ளது. இஸ்ரேலிய மக்களும் ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று சியோனியப் பேரினவாதத்திலிருந்து அமைதியாக விடுபடத் தவறினால், சியோனிய இஸ்ரேலுக்கும் இதுவே முடிவுரையின் தொடக்கமாக அமைந்து விடக் கூடும்.
இரண்டாவதாக, ஈரானிடம் இருப்பதாகச் சொல்லப்படும் செறிவூட்டிய யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்கா எவ்வளவோ முயன்றும் தோற்றே போயிற்று. அதே போல் ஈரானிடம் இருப்பதாகச் சொல்லப்படும் தொலைதூரம் சென்று தாக்கும் மீவிரைவு ஏவுகணைகளையும் அழிக்கவோ கைப்பற்றவோ அமெரிக்க, இஸ்ரேல் படைகளால் இயலவில்லை.
மூன்றாவதாக, காசாவில் பாலஸ்தீனர்கள் அமெரிக்க ஆதரவோடு இஸ்ரேலிய சியோனிச அரசால் இனவழிப்புச் செய்யப்பட்டுள்ளார்கள். பன்னாட்டு நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்க அரசு தொடுத்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெத்தன்யாகு இனவழிப்புக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவைத் தாக்குவதாகச் சொல்லி, காசாவில் போலவே மக்களை விரட்டியடிக்கும் இஸ்ரேலின் முயற்சி தொடர்கிறது. ஹவுதிகள் அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார்கள்.
ஆக, మొత్తத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்று ஈரான் வெற்றி பெற்றிருப்பது அமைதியை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய முடிவுதான் என்ற போதிலும், போரினால் ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளை எண்ணிப் பார்க்காமலிருக்க முடியாது. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் வெற்றி கிடைக்காமற் செய்ததுதான் ஈரானுக்கு வெற்றியே தவிர, இந்தப் போரினால் ஈரானிய மக்கள் அடைந்துள்ள இழப்பு அளப்பரியது. இந்தப் போரில் "தோற்றவரும் தோற்றார், வென்றவரும் தோற்றார்" என்பதுதான் இறுதிக் கணக்கு.
இறுதியும் உறுதியுமான அமைதி உடன்படிக்கை இது வரை ஒப்பமிடப்படவில்லை என்றாலும், உடனே போரை நிறுத்தும் வகையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமெரிக்க வல்லரசும் ஈரானும் ஒப்பமிட்டுள்ளன. இதன் படி, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முற்றாகத் திறந்து, கப்பல் போக்குவரத்துக்கு வழி விட வேண்டும்; அமெரிக்கா தன் முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும். போர் தொடங்கும் போது இல்லாத, போருக்கு நடுவில் முளைத்த ஒரு சிக்கல் இது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடினாலும், அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டாலும் உலக அளவிலான எரிபொருள் போக்குவரத்து தடைப்பட்டு, கச்சா பெட்ரோலியம் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி, அதனால் விலை உயர்ந்து பன்னாட்டுப் பொருளியலில் ஏற்பட்ட நெருக்கடி தணியக் கூடிய வாய்ப்புண்டு. ஆனால் இது உடனே நிகழக் கூடியதன்று; இயல்பு நிலை மீள்வதற்கு மாதக்கணக்கில் ஆகக் கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்தியா உட்படப் போருக்குத் தொடர்பில்லாத பல நாடுகளிலும் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனே விலகத் தொடங்கியுள்ளது. ஆனால் தட்டுப்பாடு வரத் தொடங்கியவுடனே சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த ஆணையிட்ட ஆட்சியாளர்கள், இப்போது அந்த விலையைக் குறைக்க முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உலகிலேயே மிகப் பெரிய அளவில் அணுவாயுதங்களைக் குறித்து வைத்திருப்பது அமெரிக்க வல்லரசுதான். இஸ்ரேலிடம் அணுவாயுதங்கள் இருப்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் அந்த அரசு இந்த உண்மையைப் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் அணுவாயுதங்கள் செய்யும் வல்லமையைக் கூட அடைந்து விடக் கூடாது என்று பிடிவாதமாக வலியுறுத்தி வந்தன. ஈரானிடம் செறிவூட்டிய யுரேனியம் இருப்பத்தைக் கூட விடமாட்டோம் என்றுதான் இந்தப் போரையே நடத்தின. அணுவாயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்கள் செய்யும் விருப்பம் தனக்கில்லை என்பதை ஈரான் பல முறை சொல்லிவிட்டது. ஆனால் போராடாத நோக்கங்களுக்கு அணுவாற்றலைப் பயன்படுத்தும் உரிமையை அது விட்டுக் கொடுக்க மறுத்து விட்டது. இப்போதைய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அணுவாயுதம் தொடர்பாகக் காலப் போக்கில் பேசிக் கொள்ளலாம் என்று அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக் கொண்டுள்ளன.
எவ்வளவு வீரம் பேசினாலும் ஈரானைப் போரில் வெல்ல முடியாது என்பதைக் கண்டு கொண்ட டொனால்ட் டிரம்ப், படிப்படியாக ஓர் அரசதந்திரத் தீர்வுக்கு என்றோ ஆயத்தமாகி விட்டார். ஆனால் இஸ்ரேலுக்கு இந்த முயற்சியில் உடன்பாடில்லை. இதனால் டிரம்புக்கும் நெத்தன்யாகுவுக்கும் கடுமையான மன வேறுபாடு வளர்ந்தது. டிரம்பின் நகர்வுகளைக் கெடுக்கும் முயற்சிகளில் நெத்தன்யாகு ஈடுபட்டார். இப்போது "அமெரிக்க-ஈரான் உடன்படிக்கை எம்மைக் கட்டுப்படுத்தாது" என்று மூத்த இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே அறிவிக்கிறார். புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டு, நிலையான போர்நிறுத்த உடன்படிக்கையில் இரு நாடுகளும் ஒப்பமிடக் காத்திருக்கும் போது, நெத்தன்யாகு தெற்கு லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருப்பது நச்சுத்தனமான நகர்வு என்று டிரம்ப் வர்ணித்திருக்கிறார்.
ஏழு நாடுகள் கூட்டமைப்பின் (G-7) தலைவர்கள் முன்னிலையிலேயே டிரம்ப் இப்படிச் சொல்லியிருப்பது பன்னாட்டு அளவில் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அமெரிக்க அதிபர்கள் இஸ்ரேலிய ஆட்சியாளர்களைக் கடிந்து கொள்வது இதற்கு முன்பும் நடந்துள்ள போதிலும், இப்படி வெளிப்படையாகவும் இவ்வளவு கடுமையாகவும் அமெரிக்க அரசுத் தலைவர் ஒருவர் இஸ்ரேலின் செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பது இதுவே முதல் முறை எனப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் அமெரிக்க ஆதரவை இழக்க நேரிடுமானால், அது மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் பெருந்திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
இந்தக் கூட்டுப் புரிந்துணர்வு உடன்படிக்கை, ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் சொத்துகள் சிலவற்றை அமெரிக்கா விடுவிக்கவும், ஈரானுக்கு உரிய இழப்பீடு தரவும் வழிசெய்துள்ளது. ஈரானிய மக்களுக்கு இது பெரிய துயர்தணிப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஈரானின் அணுத் திட்டங்கள் போலவே, ஈரானுக்கு எதிரான மேற்கத்தியப் பொருளியல் தடைகளும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிற்போடப்பட்டுள்ளன.
அமெரிக்க-ஈரான் அமைதி முயற்சி சவூதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், சிரியா, இராக் உள்ளிட்ட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிம்மதியை உண்டாக்கும். பாலஸ்தீனத்துக்கும் ஈரானுக்கும் எதிராக இந்த நாடுகளை நிறுத்தும் அமெரிக்க-இஸ்ரேலிய முயற்சி இவ்வகையில் அடிவாங்கியுள்ளது. இந்த நாடுகளில் அமெரிக்க வல்லரசின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பொருள் அமெரிக்க வல்லரசு அல்லது அதிபர் டிரம்ப் திடீரென்று அமைதியை நேசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதன்று. ஈரானுடனான பிணக்கிற்கு இராணுவத் தீர்வு காண முடியாது என்பதை இஸ்ரேல் இதுவரை உணரவில்லை என்றாலும் அமெரிக்கா உணர்ந்து விட்டது; எப்படியும் உணரத் தொடங்கியுள்ளது. போரில் வாங்கிய அடி அத்தகையது. இந்த 100 நாள் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளும், உடைமையிழப்புகளும், விண்முட்டிய பொருட்செலவும் அமெரிக்காவிற்கு அதன் வலு அல்லது வலுவின்மையை வலிக்க வலிக்க உணர்த்தியுள்ளன. சுருங்கச் சொன்னால், "ஒருதுருவ உலகம்" என்ற மயக்கம் இந்தப்போரினால் கலைந்துள்ளது.
இறுதியாக ஒன்று: காசா முனை, ஜோர்டான் மேற்குக் கரை உள்ளிட்ட பாலஸ்தீனத்தையும் தெற்கு லெபனானையும் இஸ்ரேல் வன்பறிப்பு (ஆக்கிரமிப்பு) செய்து வைத்துள்ள வரை மத்திய கிழக்கில் அமைதி நிலைத்தல் அரிது. பாலஸ்தீனத் தேசத்தின் தன்-தீர்வுரிமை நிலைநாட்டப்படும் வரை, அதாவது சியோனிச ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை மத்திய கிழக்கு அமைதியாக இருக்க முடியாது. இஸ்ரேலிய சியோனிய ஒடுக்குமுறை ஒழிந்து பாலஸ்தீன மக்கள் விடுதலை பெறுவது நோக்கிய பயணத்தில் இப்போது ஏற்பட்டுள்ள புதிய சூழல் ஒரு முன்னேற்றத்தைக் குறிப்பதாக நம்புகிறோம்.
பின்குறிப்பு: இத்தனையிலும் இந்தியா எங்கே? பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் ஏழு வல்லரசுகளின் (G-7) தலைவர்கள் கூடியிருந்த இடத்தில்தான் அமெரிக்க அதிபர் ஈரானுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பார்வையாளராகச் சென்றிருந்த இந்தியப் பிரதம அமைச்சர் நரேந்திர மோதி. போதுமா?
- தியாகு