மீட்க முடியும்.                                      

சிலையைத் தகர்த்தால்...!!!

நாகை பாலு

சிலையைத் தகர்த்தால்

சில்லுகளாகும்...!

சில்லுகளெல்லாம்

சிலை வயலாகும்...!

பெரியார் என்பதோர்

நெடுங்காடு....!

சிதைத்தாலே அங்கே

முளைத்தெழும் பாரு...!!!

செருப்பை எடுத்தவர்

தலையில் வைத்தால்

"மண்டைச் சுரப்பு "

நின்றிடுமா.?

கங்கா நதியின்

மூலப் பெருக்கு

கல்லொன்றாலே

அடைபடுமா.? 

பெரியார் உணர்வுகள்

ஈனர்கள் மூளையில்

ஊறிக் கசிந்த

சீழல்ல....!!!

இருட்டை விரட்ட

கிழக்கில் பிறந்த

சூரியக் கொழுந்தின்

சுடர்களவை....!!!!

தலையை சொரிய

கொள்ளிக் கட்டையை

கையில் ஏந்தித்

திரியாதே....!!!

தத்துவ கோட்டையை

சுண்டுவிரலால்

தகர்த்திட நினைத்து

சரியாதே....!!!

நெருப்பின் நகலல்ல

நெருப்பே இவர்நகல்

கரிக்கும் எவரையும்

தீண்டாதே...?!!!!

இருட்டைக் கிழித்து

நெருப்பைக் கக்கும்

எரிமலையோடு

மோதாதே...!!!

Pin It