தமிழ் நாவல் வரலாற்றில் தனியிடம் பெற்றவர் அவர். தம்முடைய 25வது வயதில் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவரை மணந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் பாப்பம்மாள் இறந்துவிடவே இலாசர் என்னும் அம்மையாரை மணந்தார். சில ஆண்டுகளில் இலாசர் அம்மையாரும் இறந்துவிட, புதுச்சேரி மாணிக்கத்து அம்மையாரை மணந்தார். மூன்று மக்களைப் பெற்ற பின்னர் மாணிக்கத்தம்மையாரும் மறையவே, புதுவை அண்ணுக்கண்னு அம்மையாரை மணந்தார். அண்ணுக்கண்ணு அம்மையாரும் தம் கணவருக்கு முன் மறைந்தார்.

இவ்வாறு தனது 63 ஆண்டுக்கால வாழ்வில் நான்கு முறை மணம் செய்து கொண்ட அந்தத் தமிழ் ஆசிரியர், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய மாயூரம் வேதநாயகர்தாம். இவர் ஐந்துமுறை மணந்தார் என்பாரும் உண்டு.

Pin It