அமெரிக்காவில் அரிசேனா மாகாணத்தில் டெட்ரிஃபைய்ட் ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு சற்று தொலைவில், பாரிஸ்கர் கிடாரப் பள்ளம் என்ற ஒரு பள்ளம். அதன் குறுக்களவு முக்கால் மைல், ஆழம் 600 அடி என்ற அளவில் இன்றைக்கும் இருக்கிறது.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விண் கல் ஒன்று விழுந்த வடுதான் அந்தப் பள்ளம். இது மாதிரி எத்தனையோ பள்ளங்கள் பூமியின் மீது காணப்பட்டாலும், அது உருவான விதம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் பள்ளம் வந்த விதம் பற்றிய விவரங்கள் நம்மால் அறியப்படாமல் இருக்கிறது.

விண் கற்கள் தினந்தோறும் பூமியை நோக்கி வந்தபடியே இருக்கின்றன. சில விண் கற்கள் பூமியின்மீது விழுந்து வடுக்களை ஏற்படுத்துவதுடன் வெடித்துச் சிதறி சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. 1908 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விண் கல் ஒன்று சைபீரியாவில் வந்து விழுந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெரிய பெரிய மரங்கள் பிடுங்கி எறியப்பட்டு, ரெயின்டியர் எனற மான் மந்தை ஒன்று முழுவதுமாக அழிந்தொழிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வெடிப்பினால் ஏற்பட்ட அழுத்த அலை சுமார் சுமார் 3000 மைல்களுக்கு அப்பால் இருக்கக் கூடிய இங்கிலாந்து நாட்டை அதிர வைத்ததாக சில அறிவியல் நூல்கள் குறிப்பிடுகிறது.

இந்நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் விஞ்ஙானிகள் மத்தியில் இக்கற்கள் பெரும் ஆய்வுக்கு உட்படுத்தப்ப்டடு இதன் தொற்றுவாய் என்ன? எங்கிருந்து வருகிறது என்பதில் கவனம் செலுத்தி ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். விண் கற்களில் இரண்டு வகையான கற்கள். மண் பொருளான கற்களாகவும், மற்றவை உலோகப் பொருள்களால் ஆனவையாகவும் இருக்கின்றன.

ஒரு காலத்தில் திரவ நிலையிலிருந்து பின்பு அது இறுகி உறுதிப்படுத்தப்பட உலோகப் பொருட்களில் உருவாகியிருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தில் இடம் பெறப்பட்ட இந்தப் பொருட்கள் கிரகங்களின் உள்ளார்ந்த உலோகப் பொருட்களின் பகுதியாக இருந்து, பின்பு அது உடைந்து சிதறிய நிலையில் விண்வெளியில் சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் வரிசையில் இதுவும் இடம் பெற்று இன்றளவும் சுற்றி வரும் நிகழ்வு நடந்து கொண்டுதானிருக்கிறது. (செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் நடுவே ஒரு கோள் உடைந்து நொறுங்கி இன்றளவும் சுற்றிவரும் நிகழ்ச்சியை பார்க்க முடியும்)

சூரிய மண்டலம் உருவாக்கம் பெறப்பட்ட முதல் தளத்திலேயே இது மாதிரியான விண் கற்கள் மற்றும்  தூகப்படலம் உருவாக்கம் பெற்று, அவைகள் ஒழுங்குமுறை தவிர்த்த சுழற்சியின் மூலம் விண் பொருள் அனைத்தும் உருவாகியிருக்கலாம். என்ற அறிவியல் நூல்களின் குறிப்பீடுகள் சில நமது சிந்தனையை கிளர்ச்சியூட்டுவதாக இன்றைக்கும் உள்ளது.

சூரிய மண்டலம் 456 கோடியே 90 லட்சம் ஆண்டுகள் என்ற அளவில் தமது உருவாக்கத்தை முடித்திருக்கிறது என்ற விபரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தி.ரு. பிரடரிக் மோய்னியர் மற்றும் உதவிப் பேராசிரியர் டேவிஸ் ஹீயின் போன்றோர் தமது ஆராய்ச்சியின் முடிவினைத் தெரிவித்திருக்கிறார்கள். (தினத்தந்தி - 25-12-2007, வெளிநாட்டுச் செய்திகள்)

கார்போனகியஸ் சாண்டிரைட் என்ற பழமையான விண்கல் ஒன்றை ஆராய்ந்ததின் மூலம், இக்கருத்தைக் கூறியிருக்கிறார்கள். பொருள் தோற்றம் பற்றிக் கூறும் ஆய்வு, எதுவாக இருந்தாலும் அதனை வரவேற்பதுடன் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில் எவருக்கும் உரிமையுண்டு. எனவே 456 கோடியே, 60 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்ற கருத்தை எதிலிருந்து இவர்கள் வரையறுக்கிறார்கள்?
இக்கருத்தின் முதல் ஆதாரம், ஆண்டு என்பதாகும். இந்த ஆண்டு என்ற சொல் பூமியின் சுழற்சி மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பூமியின் 365 சுழற்சிகள் கொண்ட ஒரு அலகுதான் ஒரு ஆண்டு என்பதாகும்.

ஆகவே ஆண்டு என்பதே பூமியின் சுழற்சி என்பதிலிருந்து பெறப்படும்போது அதை வைத்து இது (சூரிய மண்டலம்) தோன்றியதற்கு உண்டான நடப்புக் கணக்கை எப்படிக் கூற இயலும்? எனவே இக்கருத்து மறு சிந்தனைக்கு உரியதாகும்.

4,58,80,00,000 365 = 1667320000000
458 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் என்றால் 45680000 365 சுற்றுகள்
ஆண்டுகள் 456800000 365 = 165773200000

பூமி ஒரு லட்சத்து அறுபதாயிரத்து எழுநூற்றி முப்பத்திரெண்டு கோடி சுற்றுகள் சுற்றி முடித்த முடிவுகள் 456 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் என்பது. சூரிய மண்டலம் உருவான காலக் கணக்கை இந்த அலகை வைத்துக் கொண்டு கருத்துக் கூறுவதென்பது எப்படிப் பொருத்தமாகும்?

எனது பெற்றோர்கள் திருமணத்தின்போது நான் பந்தல் அலங்காரம் செய்தேன் என்று கூறுவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து இக்கருத்தை சிந்தித்து ஆய்ந்து பார்க்க வேண்டும்.

ஒரு ஆண்டு என்பதே நமது பூமியின் சுழல் தன்மையின் மூலம் கிடைக்கிறபோது பூமி உருவாவதற்கு முன்பு நடந்த நடப்பை இதன்மூலம் கருத்துக் கூறுவதென்பது எப்படிப் பொருந்தும் என்று கேட்கத் தோன்றுகிறது. எனவே எதையும் ஆராய்ந்து சொல்வதில் தவறில்லை. அதற்கு பூமியின் சுழற்சியின் எண்ணிக்கையைத் துணைக்குக் காட்டியதில் தான் பிரச்சினையுள்ளது.

இத்துடன் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய மண்டலத் தோற்றம் நீடித்திருக்-கிறது என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் 456,80,00,000 + 28,00,000 = 457,08,00,000 ஆண்டுகள் அதாவது நமது சூரிய மண்டலம் உருப்பெற்று இப்பொழுது வரை 437 கோடியே 8 லட்சம் ஆண்டுகள் முழுமை பெறுகிறது என்று தமது ஆய்வில் கூறுகின்றனர்.

இது தொடர்புடைய அனைத்து இயக்கங்-களுக்கும், தோற்றத்திற்கும் பூமியின் சுழல் தன்மை மட்டும் எப்படி அடிப்படை கணக்குத் தீர்க்கும் கருவியாகும்? தோற்றத்திற்கு முன்பே பூமி சுழல ஆரம்பித்துவிட்டனவா? இது மாதிரியான கருத்து பிரச்சினைகளின் கதவுகளை திறக்கவிடாமல் மூடிவிடக் கூடாது என்பதில்தான் சங்கடப்பட வேண்டியிருக்கிறது.

(நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்)

Pin It