ஆறு நிமிடக் குறும்படம். துவங்கிய இடத்தில் முடிகிறது. ஒருவரை ஒருவர் சார்ந்துதான் மனிதர்கள் இருக்கிறார்கள். இரண்டு நிமிடங்கள் பிறருக்காக ஒருவர் தருவதற்கு இல்லை. அவசர வாழ்வு. நடுத்தர வர்ககத்திற்கு இயலாமை. பயன்பாட்டுவாதம் பணியாகிவிட்டது. 
 
கீழ்த்தட்டு மனிதர்க்கு அதுவே அன்றாட ஜீவிதம். தரகனுக்கு அந்த இரண்டு நிமிடம் பிறரை ஏமாற்ற வேண்டும். ஒரே ஒரு தருணத்தில் மட்டும் தான் கேட்கும் அதே நிமிடத்தை ஒரு ஏழை மனிதனிடம் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் - வட்டிக்கு விடுபவர் – வாக்குக் கேட்கவென இறைஞ்சுகிறார். அங்கு ஏழை மனிதனும் அவரது குடிசையும் நிமிர்ந்து நிற்கிறது.  
 
இது ஒரு சுழல். அந்த நிமிடம் வட்டிக்கு விடுப்பனுக்குத் தர அன்றாடம் ஊதுபத்தி விற்கும் ஏழை மனிதனுக்கு உபரி இல்லை. அவனுக்கு அது இழப்பு நிமிடங்கள் எனத் தெரியும். அனைவரும் இரண்டு நிமிடங்களுக்குத்தான் அலைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்கள். உழைப்பவனுக்கு அந்த இரண்டு நிமிடங்கள் அவனது ஜீவிதம்.
 
படத்தை நகைச்சுவைப் படம் என வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வகைமைக்குள் அடக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தில் இவ்வாறு நேர்கிறது. படம் எந்த விதத்திலும் நகைச்சுவைப்படம் இல்லை. ஒரு ஏழை மனிதனின் துயர் சொல்லும் படம்.
 
இயக்கம்.      :  அருண் பகத்
ஒளிப்பதிவு :  லோகநாதன்
தயாரிப்பு      :  ஒளிவியன்  கலைக்கூடம் 
 
Pin It