வேட்பாளர்: என் பேரை "தர்மம்"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?
உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட "தர்மம்" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
.........................................
சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?
அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!
.........................................
வேட்பாளர்: அந்த தொகுதிக்கு "கால்நடை"யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!
தொண்டர்: "மனுஷனா"வே போயி கேளுங்க தலைவரே!
.........................................
"ஓட்டுப் போட்டுட்டு வெளியே வர்ற வாக்காளர்களுக்கெல்லாம் அந்த வேட்பாளர் ஏதோ ஸ்வீட் தர்றாரே...என்னங்க அது?"
"வேறென்ன...."அல்வா"தான்!"
.....................................................................................................
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அரசியல்
தேர்தல் சிரிப்புகள்
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: அரசியல்