(மன்னரும், அமைச்சரும்)
"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"
"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"
---------------------------------------
"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"
“எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?"
"அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறா, அந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"
-----------------------------------------
"என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"
"ஏன் சந்தேகம் மன்னா?"
"சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"
---------------------------------------
"பட்டினியால் வாடும் நம் மக்கள் அகழியிலுள்ள முதலைகளைப் பிடித்துச் சாப்பிடுகிறார்களாம் மன்னா....!"
"ஆகா! மக்களுக்குத் தெரிந்த மாற்றுணவுத் திட்டம் மந்திரியாகிய உமக்குத் தெரியவில்லையே....யாரங்கே? இன்று முதல் அரண்மணையிலும் முதலைக்கறி சமைக்க ஏற்பாடு செய்யுங்கள்!"
-----------------------------
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
கீற்றில் தேட...
அரசியல்
மன்னர் ஜோக்ஸ்
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: அரசியல்