"நம்ம மகளிர் அணியை மாற்றியமைக்கப் போறாராமே தலைவரு......ஏனாம்?"
"அதுல இருந்தவங்கல்லாம் தலைவரோட 'சின்ன வீடா' ஆயிட்டாங்களாம்!"


"வெளிநாட்டுக்குப் போற நல்லெண்ணத் தூதுக் குழுவுல நம்ம தலைவரும் இருக்கறது உனக்கு ஏம்பா பிடிக்கலே?"
"இவரு ஒரு கெட்ட எண்ணம் பிடிச்ச ஆளாச்சேப்பா!"


"எல்லாத் தலைவர்களும் பேருக்கு முன்னால தங்களோட ஊரோட பேரைச் சேர்த்துக்கற மாதிரி நம்ம தலைவரு ஏன் போட்டுக்க மாட்டேங்கறாரு?"
"இவரோட ஊரு பேரு பொறம்போக்குன்னு இருக்கேப்பா!"


"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?"
"கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"


"சீக்கிரத்துல மூன்றாவது அணி அமைப்போம்னு மேடைல பேசிட்டு வந்த நம்ம தலைவருதன் செயலாளர்கிட்ட ஏதோ ரகசியமா பேசினாராமே...என்ன பேசினாராம்?"
"அப்படீன்னா என்னன்னு அவர்கிட்ட கேட்டாராம்!" 

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Pin It