ஆண்டுதோறும் 150,000 டன் எடை பிளாஸ்ட்டிக் குப்பைகள் கடலில் வீசப்படுகின்றன. தி கிரேட் பசுபிக் கார்பேஜ் ப்பேட்ச் என்று குறிப்பிடுமளவுக்கு கலிபோர்னியா முதல் ஹவாய்த் தீவு வரை பிளாஸ்ட்டிக் குப்பைகள் நிரப்பியிருக்கின்றன. இது ஆகாயத்திலிருந்து சேட்டிலைட் மூலம் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.

கடலில் பிளாஸ்டிக் வீசினால் அது மூழ்காமல் மிதக்கும். பெரிய கடல் மிருகங்கள் அதை விழுங்கிவிட்டு செரிக்க முடியாமல் செத்துப் போகின்றன. கடலில் நிலவும் குளிர், வெப்பம், உப்பு மற்றும் வெயில் காரணமாக பிளாஸ்ட்டிக் சிதைகிறது என்றும் சிதைவிலிருந்து டன் டன்னாக நச்சுப் பொருள்கள் கடல் நீரில் கலந்து எல்லா உயிரினங்களையும் தாக்குகின்றன என்றும் செய்டோ என்ற ஜப்பான் அறிஞர் தன் ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவிக்கிறார்.

வழக்கமான பிளாஸ்ட்டிக்குகள், பிஸ்பீனால் மற்றும் பிஎஸ் ஒலிகோமெர் என்ற நச்சினை தருகின்றன. தெர்மாகோல் எனப்படும் ஸ்டைரோஃபோம் பொருள்கள் நசுக்கப்பட்டு பெரிய உருண்டைகளாக கடலில் மூழ்குகின்றன. அவற்றிலிருந்து ஸ்டைரோபோம் மோனோமர், டைமர் மற்றும் ட்டிரைமர் நச்சுகள் உற்பத்தியாகின்றன. இம்மூன்றுமே உடலில் புகுந்தால் உடனே கேன்சரை உருவாக்கக் கூடியன என்பது தெரிந்த விஷயம்.

பிளாஸ்டிக் கெடாது அதனால் கடலில் வீசிவிட்டால் தொந்தரவு விட்டது என்று பல நாடுகள் நினைக்கின்றன. நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்பது இப்போது தெரிகிறது.

- முனைவர். க. மணிபயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

 

Pin It