Sound meterபணிபுரியும் இடத்தில் இரைச்சல் தவிர்க்க இயலாதது. இரைச்சலினால் செவிப்புலன் பாதிக்கப்படும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்கான பாதுகாப்பு சாதனத்தை பலரும் பயன்படுத்துவதில்லை. தற்போது இரைச்சலை அளக்கும் கருவி ஒன்று புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்தக் கருவி இரைச்சலான சூழலில் மனிதர்களை எச்சரிக்கை செய்கிறது.

ஐரோப்பிய யூனியனில் பணி இடத்தில் வெளிப்படும் இரைச்சலின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது 87 டெசிபல் ஒலிஅளவு மட்டுமே அனுமதிக்கப்படும். 87 டெசிபல் ஒலிஅளவை இரைச்சல் மீறும்போது நிறுவனங்கள் எச்சரிக்கப்படும். ஒலி அளவை மேலும் குறைக்க இயலாத சூழ்நிலை இருக்குமானால் தொழிலாளிக்கு காதுகளைப் பாதுகாக்கும் சாதனம் வழங்கப்படும்.

தொழிலாளிகளை மிரட்டும் இரைச்சல் சிக்கலில் இருந்து பாதுகாப்பளிக்க ‘இரைச்சல் மீட்டர்’ ஒரு புதிய தீர்வாக வந்துள்ளது. ஹாலந்து நாட்டில் ஒரு பாதுகாப்பு மேலாளரால் உருவாக்கப்பட்ட இந்த இரைச்சல் மீட்டர் இரைச்சலின் அளவு எல்லை மீறும்போது தொழிலாளியை எச்சரிக்கின்றது. ஒரு கிரெடிட் கார்டு அளவிலான இந்த இரைச்சல் மீட்டரை உடையில் பொருத்திக்கொள்ள முடியும். இரைச்சலான சூழலில் தொழிலாளி நுழைந்த உடனேயே இரைச்சலின் அளவைக்காட்ட ஒரு விளக்கு எரியத்தொடங்கும்.

80 டெசிபல் அளவிற்கு கீழான இரைச்சலுக்கு பச்சை விளக்கும், 80 முதல் 100 டெசிபல் வரையிலான இரைச்சலுக்கு மஞ்சள் விளக்கும், 100 டெசிபலுக்கு மேற்பட்ட இரைச்சலுக்கு சிகப்பு விளக்கும் எரியுமாறு இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் இந்த சாதனம் தொழிலாளிக்கு இரைச்சலைக் கேட்க மட்டுமின்றி பார்க்கவும் உதவிசெய்கிறது. 

- தகவல்: மு.குருமூர்த்தி

Pin It