சென்னையில் இந்த ஆண்டு நடைப்பெற்ற 200கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமான 8 வது இந்து ஆமிகக்கண்காட்சி (ஆகஸ்ட் 2 முதல் 8 வரை) பற்றி தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளிகளின் வாயிலாக பெரும்பாலாக நாம் அறிந்திருப்போம். அதிலும் அங்கே நடைபெற்ற மூடநம்பிக்கை மற்றும் மனித சமுதாயத்தை பின்னோக்கிச் சிந்திக்கிற வகையிலான ‘குருவணக்கம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்குக்குப் பாத பூஜை செய்தது , பெண்மையைப் போற்றுவோம் என்ற வகையில் பள்ளிச் சிறுவர்கள், சிறுமியருக்குப் பாத பூஜை செய்தது மற்றும் ‘பசு வந்தனம்’ என்ற பெயரில் மத்திய பா.ஜ.க அமைச்சர்கள் தலைமையில் ஏழு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகள் சிறு சமுதாய விழிப்புணர்வுள்ள நாம் அனைவரும் அறிந்ததுதான்.
அதிலும் குறிப்பாக ‘குருவணக்கம்’ என்ற நிகழ்வைப் பற்றி தோழர் கனிமொழி அவர்கள் நாடாளுமன்றத்தில் கண்டித்துப் பேசியது நம் பெரும்பாலோரின் கவனத்தை ஈர்த்தது. ஆகையால் நான் உங்களோடு நீங்கள் இந்த சுளுளு கண்காட்சி பற்றி வந்த நீங்கள் அறிந்த வெளிப்படையான நிகழ்வுகள் பற்றி விவாதிக்காமல், நான் நேரில் சென்று அறிந்த எந்த ஊடகத்திலும் வராத ஒரு சில அடைப்படையான நிகழ்வுகள் - கட்டமைப்புகள் பற்றிச் சில தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
நான் இந்த இந்துக் கண்காட்சி சென்னையில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட 2009ம் ஆண்டு நண்பர் அன்பு தனசேகர் (தி.வி.க) அவர்களுடன் ஒரு விடுமுறை நாளில் சென்று பார்த்தேன். அப்போது சுமார் 50 அரங்குகள் கொண்ட பெரும்பாலும் பார்ப்பனர்களே எங்கு பார்த்தாலும் தென்படுகிற நிகழ்வாக அது அப்போது இருந்தது. அன்று நான் நினைத்தது, இந்த இந்துக் கண்காட்சி என்பது வெறும் பார்ப்பனர்களுக்குள்ளான பங்களிப்புடன் மட்டுமே இது இருக்கும் என்றும், பார்ப்பனரல்லாத மக்களை இந்தக் கண்காட்சி ஈர்க்காது என்றும் நினைத்தேன்.
ஏனென்றால், அன்று இந்தக் கண்காட்சிக்கு வந்தவர்கள் ஆயிரக்கணக் கானவர்கள்தான். அதிலும் 80ரூ பார்ப்பனர்கள். என்னுடைய எண்ணம் தவறு என்று 2013 ம் நடைபெற்ற 5 வது இந்துக் கண்காட்சிக்கு நண்பர் பிரபாகரன் அழகர்சாமியுடன் சென்ற பிறகு தெரிந்து கொண்டேன். ஏனென்றால் 2013 ல் நான் சுமார் 200 அரங்குகள் கொண்ட பிரமாண்டமான ஒரு கண்காட்சியை சுளுளு பார்ப்பனர்கள் நடத்தியிருந்தார்கள். எனக்கு அது மிகப் பிரமாண்டமாகத் தெரிந்தது. ஏனென்றால் 2009ல் சில ஆயிரம் பேரைப் பார்வையாளர்களாகப் பார்த்ததிற்கும் 4 ஆண்டுகள் கழித்து, அதுவே சுமார் 4 லட்சம் பேர் பார்வையாளர்களாகப் பங்கேற்றது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் அடைந்த அந்த வளர்ச்சி சுளுளு பற்றியும் அவர்களுடைய கட்டமைப்புப் பற்றியும் பல பரிணாமங்களை எனக்கு உணர்த்தியது ..
ஆகையால், நான் இந்த ஆண்டு நடைபெற்ற 8 வது கண்காட்சிக்குச் செல்லும் முன்னரே நான் நினைத்தது நிச்சயம் நான் கண்ட 2013 ம் ஆண்டுக் கண்காட்சியை விட, அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் என நான் எதிர்பாத்தேன் . அதன் படி ஆகஸ்ட் 6 ம் தேதி சென்ற பொழுது சுமார் 250 க்கும் மேற்பட்ட அரங்களுடன் பிரமாண்டமாகக் காட்சியளித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்திவரும் ஆடிட்டர் (RSS ) குருமூர்த்தி அவர்கள் தெரிவித்த கருத்துப்படி சுமார் 400 பள்ளிகளின் பங்களிப்புடன் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் மாணவர்கள் பங்கேற்று 1000 க் கும் மேற்பட்ட போட்டிகளுடன், சுமார் 10 இலட்சம் பார்வையாளர்களைக் கொண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி நிறைவு பெற்றுள்ளது. இந்தக் கணக்கைப் பார்த்த பொழுது உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் 10 லட்சம் பேரை வெறும் ஏழே நாட்களில் கண்காட்சிக்கு வரவழைப்பது மிக மிக கடினமான செயல்.
என்னுடைய கணக்குப்படி சென்னை மற்றும் அதன் பக்கத்துக்கு மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி மக்களில் இருந்துதான் தான் பெரும்பாலும் வந்திருக்க முடியும். அதன்படி கணக்கிட்டால் இந்தப் பகுதிகளில் உள்ள 5ரூ மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வந்துள்ளார்கள். இந்தக் கணக்கு என்பது மிகச் சாதாரணமில்லை. இந்தக் கணக்கை எட்ட அவர்கள் பல வழிகளில் மிகவும் நூதன முறைகளைப் பின்பற்றுகிறார்கள். என்னுடைய கணிப்புப்படி இந்த இந்து ஆன்மிகக் காட்சியை தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான கோவை ,மதுரை ,சேலம் ,திருச்சி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட , தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் ஆண்டுகளில் நடத்துவார்கள் என்றே எண்ணுகிறேன். இதே வேகம் மற்றும் நுட்பமாக அவர்கள் செயல்படுவார்களானால் அடுத்த 10 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடெங்கும் சுமார் 1 கோடி மக்கள் பங்குபெறும் மிகப்பெரிய விழாவாக இது இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அது சரி 85 % இந்து மக்கள் வாழ்கிற ஒரு மாநிலத்தில், அவர்களில் 98% பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் போது 1 கோடி என்ன பெரிய அதிசயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் தமிழ் நாட்டில் உள்ள சுமார் 6 கோடி இந்துக்கள் - திராவிடர்கள். இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் அவர்கள் நேரடியான சுளுளு கருத்தியலுக்கு ஆட்படாதவர்கள்.ஆகையால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், RSS போன்று சிறுபான்மையினருக்கோ மற்றும் திராவிடர் கருத்தியலுக்கோ எதிரான கருத்து உடையவர்கள் அல்லர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இன்றும் திராவிடக் கருத்தியல் உள்ள அரசியல் கட்சியிலேதான் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். ஆகையால் அவர்கள் கோவிலுக்குச் செல்வதைப் போன்று இந்தக் கண்காட்சிக்குச் செல்வதை நாம் ஒன்றாக நினைத்துவிட முடியாது. ஏனென்றால் இந்தக் கண்காட்சியில் அவர்கள் முழுக்க முழுக்க மிக நுட்பமான முறையில் செய்வது RSS பிரச்சரம்தான். அதன் ஒருசில கூறுகளை இப்போது பார்க்கலாம்
1. சிறுபான்மையினர் எதிர்ப்பு போன்ற நேரடி RSS பிரச்சாரம்
அரங்கத்தினுள் நுழைந்தவுடன் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் (www.vsrc.in) என்ற அரங்கு முதலில் இருந்தது. பெயரைப் பார்த்தால் ஏதோ ஒரு வகை ஆராய்ச்சி மையம் போல் தோன்றுகிறது ஆனால் அவர்கள் அதில் அவர்கள் செய்வது முழுக்க முழுக்க மாற்று மதத்தினருக்கு எதிரான பிரச்சாரம். வெளிப்படையான தமிழ்நாடா? தாலிபான் நாடா? மதமாற்றம் தேசிய அபாயம், லவ் ஜிகாத்தை தடுக்க என்ன செய்யலாம் மற்றும் பல பிளக்ஸ் ஒட்டப்பட்ட அரங்கமாகவே அது காட்சியளித்து.
மேலும் அந்த அரங்கில் RSS அமைப்பைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து அங்கு வந்த அனைவருக்கும் சுமார் ஒரு 10 நிமிடங்கள் என ஒவ்வொரு குழுவாக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் இப்படி வெளிப்படையாக பிளக்ஸ் வைத்து அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை அதுவும் முதல் அரங்கினுள் அவர்கள் செய்தது தங்களது அரசுகள்தான் இங்கு உள்ளன என வெளிப்படையாக நமக்கு உணர்த்தியது
அவர்களின் அகண்ட பாரதக் குறியீடுகளை அரங்கின் மையப்பொருளாக மிகப் பெரிய பதாகைகளில் வைத்திருந்தது
வழக்கம்போல் RSS ன் நேரடி மற்றும் கிளை இயக்கங்களின் வெளியீடுகளான விஜயபாரதம், சேவாபாரதி மற்றும் இந்துமுன்னணி போன்றவைகளுக்கு சுமார் 10 க்கும் மேற்பட்ட அரங்குகள் ஹெட்கெவர்கர் மற்றும் கோல்வால்கர் புகைப்படங்களுடன் அமைக்கப்பட்டு இருந்தது.
2. கல்வி நிலையங்களின் மூலமாக RSS ஐப் பரப்புவது
இந்தச் செய்தி உங்களுக்குத் தெரிந்ததுதான். நான் இங்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் சுமார் 400 பள்ளிகளுடன் ஒண்ணரை இலட்சம் மாணவர்கள் பங்களிப்புடன் நடத்தப்பட்டது. இதற்கு மூலகாரணமாக விவேகானந்தர் ரதம் என்ற பெயரில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள DAV, vivekanatha வித்யாலயா உள்பட வாய்ப்புள்ள அரசுப்பள்ளிகள் வரை இந்த ரதம் கண்காட்சிக்கு 10 நாட்களுக்கு முன்பே எடுத்துச்செல்லல்ப்பட்டது. இதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூட தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, சிவா நர்சரி கார்டன்ஸ், பாரதிய அறநெறி பண்பாட்டுக் கல்வி மையம் ( correspondence Hindu ideological course) உள்ளிட்ட பல கல்வி நிலைய அரங்குகள்.
3.NGO என்ற பெயரில் பல RSS நிறுவனங்களை நிறுவியது
Common civil rights மக்கள் குடியுரிமை அமைப்புகளின் நிறுவனக்களின் சார்பில் சில அரங்குகளை அங்கு அமைத்திருந்தார்கள். எடுத்துக்காட்டாக, ஆனந்தம் இளைஞர் அமைப்பு, பெண் நலம், அகில பாரதீய க்ரஹக் பஞ்சாயத்து (ABGP ) and யூத் பார் சேவா என்ற பெயரில் இளைஞர் முன்னேற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவி, அனாத பிரேத கைங்கரிய டிரஸ்ட் என்ற பெயரில் அநாதைப் பிணங்களை எடுத்து இந்து முறைப்படி ஈமச்சடங்கு செய்வது போன்றவை.
4. இயற்கை மருத்துவம் , இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுசூழல்
இயற்கை மருத்துவம் என்ற பெயரில் ஆயுர்வேதம் பற்றிய பரப்புரை, கடவுள் நம்பிக்கையுடன் கூடிய சைவ மருத்துவம். இயற்கை வேளாண்மை என்ற பெயரில் பசு பாதுகாப்பு இயக்கங்கள், பெண் நலம் என்ற பெயரில் பெண்களுக்கான உடலியல் சிக்கல்களுக்கான உதவும் அமைப்பு (மார்பக புற்று நோய் தீர்வு உள்பட )
நாம் செய்யவேண்டியது என்ன ?
நான் இங்கு குறிப்பிட்டது ஒரு சிறு சாம்பிள் தான். அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்வையும் போட்டால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம் . பல மூத்த பெரியார் தொண்டர்கள் சொல்லி நான் கேட்டது “நாம் பார்ப்பனர்களைப் பார்த்து நிறைய விஷயங்களை - அவர்களின் நுட்பமான அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதுதான்.
அதாவது அவர்கள் RSS எப்படி பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரப் பயணங்கள் என்பதோடு மட்டுமில்லாமல், கல்விநிலைகள், அரசுத்துறைகள், NGO, செய்தித்துறை, சுற்றுச்சூழல் உள்பட பல வகையான கிளை அமைப்புகளை அல்லது நிறுவனங்களை அமைத்துள்ளார்களோ - அதேபோல் நாமும் வெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைப் பயணங்கள் என்ற அளவில் நின்றுவிடாமல் (குறிப்பாக தாய்த்தமிழ் பள்ளி போன்ற மக்களிடம் வரவேற்பில்லாத - நடைமுறைக்கு பயனளிக்காதவைகளை விட்டுவிட்டு) முற்போக்குச் சிந்தனையுடன் பலதுறைகளில் கிளை அமைப்புகளை உருவாக்குவது ஒன்றுதான் நாம் அவர்களை வெல்ல வழி.
இல்லையேல் பல நூற்றாண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் பார்ப்பனீயம் சென்ற நூற்றாண்டில் அதற்கு எதிராகத் தோன்றிய பெரியார் என்ற தத்துவத்தை - எப்படி வரலாற்றில் அவர்கள் பல எதிர்த் தத்துவங்களை (பெளத்தம்) முறியடித்தார்களோ, அதேபோல் பெரியாரியலைத் துடைத்தெறித்து விட்டுத் தனது பயணத்தைச் சிறுதும் தடையில்லாமல், இந்த நவீன அறிவியல் யுகத்திலும் தொடருவார்கள்.
ஏனென்றால், அதற்காக அவர்கள் புதுப்புது யுக்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் என்பது மாறாதது என்ற அறிவியலுக்கு எதிராக நாம் (பெரியார் தொண்டர்கள்) மட்டும் பழைய பிரச்சார யுக்திகளை மட்டும் வைத்துக்கொண்டு எப்படிச் சமுதாயத்தை மாற்ற முடியும்? நீங்களே சிந்தியுங்கள் !!!