"பயங்கரவாதிகள்' அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரை குத்தப்பட்ட மக்கள், ஒட்டுமொத்த மனித இனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது, மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.

da_35பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், நிபுணர்களின் வாக்குமூலங்கள், ஊடக அறிக்கைகள் என இத்தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட மெய்நிலைகளின் அடிப்படையில், கடந்த 2002 முதல் (போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து) இன்று வரை, இலங்கை அரசால் மூன்று வகையான மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டுள்ளன என நாங்கள் வரையறுக்கிறோம்.

 தமிழ் மக்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட வலுக்கட்டாயமாக "காணாமல் அடித்தல்'

 போர் மீண்டும் தொடங்கிய பிறகு நடந்த குற்றங்கள் (2006 – 2009), குறிப்பாக போரின் இறுதி மாதங்களில்  ராணுவ இலக்குகள் அல்லாத மக்களின் பொது கட்டமைப்புகளான மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு நடத்தியது  அரசு அறிவித்த "பாதுகாப்பு வலையங்கள்' மற்றும் "தாக்குதலற்ற பகுதிகள்' மீது குண்டுவீச்சு நடத்தியது.  போர்ப் பகுதிகளில் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகளை தடுத்தது  கனரக ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தியது

உணவு மற்றும் மருந்தை போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது  கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை மோசமாக நடத்தியது, துன்புறுத்தியது மற்றும் கொலை செய்தது  துன்புறுத்தல்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வல்லுறவு  தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது  இறந்து போனவர்களின் உடல்களை சேதப்படுத்தியது  போரின் போதும் அதற்குப் பிறகும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள்  தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை சுட்டுக் கொலை செய்தது  வலுக்கட்டாயமாக காணாமல் அடித்தது  வல்லுறவு  சத்துக்குறைவு  மருத்துவ உதவிகள் பற்றாக்குறை.

போர்க் குற்றங்கள்

மேலே 2ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது – இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை ஆயுதப் படைகள் ஆகியவை ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள "போர்க் குற்றங்கள்' புரிந்துள்ளதை தெளிவாக்குகின்றன. "ரோம்' சட்டத்தின் பிரிவு 8 கீழ் வருமாறு கூறுகிறது :

இந்தப் போரானது நாடுகளுக்கு இடையிலானது என்றால், கீழ்க்காணும் குற்றச்சாட்டுகள் பொருந்தும் :

(b)நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையிலான போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது, கீழ்க்காணும் செயல்களை உள்ளடக்கும் :

i பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள்.

ii ராணுவ இலக்கல்லாத பொது கட்டமைப்புகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது.

iv தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி, அதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய ராணுவ லாபத்தை விட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொது மக்களுக்கு காயம் ஏற்படுத்துவது, பொது கட்டமைப்புகள், பொது மக்கள் உடைமைகள் ஆகியவற்றை பரவலாக சேதப்படுத்துவது, இயற்கைச் சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவது ஆகியவை.

vi ஆயுதங்களை கைவிட்டு விட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல்லது தாமாக முன் வந்து சரணடைந்த ஒருவரை கொல்வது அல்லது காயப்படுத்துவது.

ix மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், மருத்துவமனைகள் அல்லது ராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ, நோய்வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்.

xxi சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப் பாக அவமானப்படுத்துவது அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது.

xxii வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (ஊ)இல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன் கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.

xxv ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது உட்பட, பொது மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருட்களைத் தடுப்பதன் மூலம் பட்டினியை போரில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவது.

மோதல் உள்நாட்டுத் தன்மையுடையதாயின் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகள் பொருந்தும் :

(c) உலக அளவில் அல்லாத ஆயுத மோதலெனில், 12 ஆகஸ்ட் 1949 நாளிட்ட 4 ஜெனிவா ஒப்பந்தங்களில் பொதுவாக உள்ள பிரிவு 3அய் மீறுவதானது, மோதலில் நேரடி பங்கு கொள்ளாதவர்கள், அவர்கள் ஆயுதப் படையின் பகுதியாக இருந்தாலும், ஆயுதத்தை கைவிட்டவர்கள் அல்லது நோய், காயம் அல்லது தடுத்து வைப்பு அல்லது பிற காரணங்களுக்காக போரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக கீழ்க்காணும் செயல்களை செய்வதாகும்.

i உயிருக்கும் மனிதர்களுக்கும் எதிரான வன்முறை. குறிப்பாக எல்லா வகையிலான கொலைகள், சிதைத்தல், கொடூரமாக நடத்துதல் மற்றும் துன்புறுத்தல்.

ii சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தும் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது.

iii பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தல்.

iv அனைத்து சட்டப்பூர்வமான பாதுகாப்புகளும் வழங்கப்பட்ட நிலையில் நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்றத்தால், அளிக்கப்பட்ட ஒரு முன்னோடி தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள்.

(e) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி, நாடுகளுக்கு இடையில் அல்லாத போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது, கீழ்க்காணும் செயல்களை உள்ளடக்கும் :

i பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள்.

iv மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், மருத்துவ மனைகள் அல்லாது ராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ, நோய்வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்.

vi வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (F)இல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன் கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.

எனவே, இலங்கையில் நடைபெற்ற போரை சர்வதேச அளவிலானது என்று கருதினாலும், உள்நாட்டுப் போர் என்று கருதினாலும் இலங்கை அரசு புரிந்துள்ள போர்க் குற்றங்களை நாம் தெளிவாகக் கண்டுள்ளோம்.

மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்

da_37முதலாவதாகவும் (வலுக்கட்டாயமாக காணாமல் அடித்தல்) மூன்றாவதும் (இடம் பெயர் முகாம்களில் போரின்போதும் அதற்குப் பிறகும் நடைபெற்ற மீறல்கள்) குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது, ரோம் சட்டப் பிரிவு 7இல் கொண்டுள்ளபடி தெளிவாக மானுடத்திற்கு எதிரான குற்றங்களாகும். அதிலும் குறிப்பாக கீழ்க்காணும் பிரிவுகளின்படி :

கீழ்க்காணும் ஏதேனும் செயல்கள், ஒரு பரவலான அல்லது திட்டமிட்டத் தாக்குதலின் பகுதியாக, ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது, தெரிந்தே நடத்தப்படுமாயின் –

a. கொலை

b. படுகொலை

d வெளியேற்றுதல் அல்லது மக் களை கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல்

e. உலகளாவிய சட்டங்களில் கூறப்பட்டுள்ள அடிப்படை சட்டதிட்டங்களை மீறி சிறை வைத்தல் அல்லது நடமாட தடை விதித்தல்

f. துன்புறுத்தல்

வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (F இல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள்.

h. ஒரு குறிப்பிட்ட குழுவினர் மீது அல்லது பத்தி 3இல் விளக்கப்பட்டுள்ளபடியான அரசியல், மரபின, இன, பண்பாட்டு, மத, பாலியல் அல்லது அனைத்துலகச் சட்டத்தின்படி அனுமதிக்க முடியாத, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற அடிப்படைகளில் உள்ள ஒரு கூட்டத்தினர் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள்.

i. வலுக்கட்டாயமாக காணாமல் அடித்தல்.

k. பெரும் துன்பத்தையோ அல்லது பெரும் உடல் காயத்தையோ உளவியல் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்போ ஏற்படுத்தக்கூடிய இதையொத்த பிற மனிதத்தன்மையற்ற செயல்கள்.

இனப்படுகொலை எனும் குற்றத்தை செய்திருப்பதற்கான சாத்தியங்கள்

இனப்படுகொலை குற்றச்சாட்டை விசாரிக்க தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்படவில்லை எனினும், வாக்குமூலங்கள் அளித்த சில நிறுவனங்களும் தனிநபர்களும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மீது இனப்படுகொலை நடந்தது அல்லது நடந்திருக்கலாம் என்பதை அங்கீகரிக்குமாறு கூறினர். போர்க் குற்றம் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றத்துடன் இனப்படுகொலைக் குற்றச்சாட்டையும் இணைக்கும் அளவிலான ஆதாரங்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்படவில்லை. சில உண்மைகள் அவை இனப்படுகொலைச் செயல்களாக இருக்கக் கூடும் என்ற அளவில் முழுவதுமாக ஆராயப்பட வேண்டும். அப்படியான உண்மைகளில் கீழ்க்காணுபவையும் அடங்கும் :

”ஒரு குழுவினர் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை'' அழிக்க என்று லெம்கின் கூறியது போல் (இங்கு தமிழ்க் குழுவினர்) தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக (ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள்) இலங்கை ஆயுதப்படையினரும், அரசின் ஆதரவோடும் வழிகாட்டுதலோடும் செயல் பட்ட துணை ராணுவக் குழுவினரும் மேற்கொண்ட, தனிநபர்களை வலுக்கட்டாயமாக "காணாமல் போக'ச் செய்த முறை.

இடம் பெயர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் அவல நிலை நீடிப்பது, சுட்டு கொல்லப்படுவது தொடர்வது, திட்டமிட்ட வல்லுறவு, வலுகட்டாயமாக "காணாமல் போகச் செய்தல்', நாட்டில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பரவலாக அழிக்கப்பட்ட கட்டமைப்புகள். தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து போன்றவற்றிற்கு பற்றாக்குறை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போதைய நிலை என்றாலும், அவற்றை குற்றச்சாட்டுகளில் இணைக் கப் போதுமான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனினும், இனப்படு கொலை நடந்திருக்கலாம் என்ற நோக் கில் தொடர்ந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை தீர்ப்பாயம் ஏற்றுக் கொள்கிறது.

மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இருக்க எந்த ஒரு மனிதனுக்கும் உள்ள உரிமை

“பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்'' என்று சொல்லப்படுகிற விஷயமானது, இத்தகைய போர்களில் செய்யப்படும் எந்த ஒரு செயலும், மிக ஆபத்தான ஓர் எதிரியை அழிக்கவல்ல சிறந்த வழியாக கருதப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. இந்த புதிய பாதுகாப்பு முன் மாதிரியானது, மக்களில் "பயங்கரவாதிகள்' என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்துவித மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்துகிறது. "பயங்கரவாதிகள்' என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புரிந்த குற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, அவர்களும் மனித உரிமைச் சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வருவார்கள் என்பது இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அடிப்படையான கருத்தாகும். பாதிக்கப்பட்டவர்களின் எந்த ஒரு குற்றமும், இத்தீர்ப்பாயத்தினால் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு போர்க் குற்றத்தையும் அல்லது மானுடத்திற்கு எதிரான குற்றத்தையும் நியாயப்படுத்த முடியாது.

இதனை முக்கியத்துவப்படுத்துவதன் காரணம் என்னவெனில், இந்த புதிய பாதுகாப்பு முன் மாதிரிக்குள், "பயங்கரவாதிகள்' அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரை குத்தப்பட்ட மக்கள், ஒட்டுமொத்த மனித இனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது, மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.

"அமைதிக்கு எதிரான குற்றங்கள்' செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு

தீர்ப்பாயத்திடம் இறுதியாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு – "அமைதிக்கு எதிரான குற்றங்கள்' இலங்கை அரசும் அதனுடன் வேறு சில அந்நிய சக்திகளும் இணைந்து ஒரு வெறுப்புக் கொண்ட போரையே நடத்தின என்று குற்றம் சாட்டப்படுகிறது. நூரெம்பெர்க் தீர்ப்பாயத்தில் அமைதிக்கு எதிரான குற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன :

(1) வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு போரையோ அல்லது சர்வதேச ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் அல்லது வாக்குறுதிகள் ஆகியவற்றை மீறிய ஒரு போரையோ நடத்த திட்டமிட்டு, ஆயத்தமாகி, தொடங்கி நடத்துவது (2) அப்படியான செயல்களை நடத்தி முடிப்பதற்கான ஒரு பொதுத் திட்டத்திலோ, சதித் திட்டத்திலோ பங்கேற்பது.

இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதில் தீர்ப்பாயத்திற்கு உள்ள சிக்கலானது, தீர்ப்பாயத்தின் முன் இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வைக்கப்பட்ட சாட்சியங்களால் மட்டுமல்ல, ஆனால் கூடுதலாகவும் முக்கியமாக வும், இக்குற்றச்சாட்டை மனித உரிமைச் சட்டங்களின் பகுதியாக ஏற்றுக் கொள் வதால் ஏற்படக்கூடிய விளைவுகள்.

அமைதிக்கு எதிரான குற்றம் என்பது, அமைதி நிலவும் சூழலில், இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வன்முறையான ஒரு போரைத் தொடங்குவதன் மூலம் இந்த அமைதி சூழலை உடைப்பது.

இருப்பினும், மனித இனம் அவலத்தை எதிர்நோக்கிய பெரும்பாலான ஆயுத மோதல்களில் ஒரு குழப்பமான மற்றும் சிக்கலான நோக்கிலிருந்து சூழலை ஆராய முடியும். ஒரு போரில் முதன் முதலில் தாக்குதலைத் தொடங்கியவர் யாரென முடிவு செய்வது கடினமானது மட்டுமல்ல, ஒரு சார்பானதாகவும் ஆகிவிடுகிறது. ஒடுக்குமுறையானது பல ஆண்டுகள் சேர்ந்து கொண்டே போய் ஓர் இக்கட்டான நிலையில் வினையாற்றும்போது அது ஒரு வன்முறைப் போரின் தொடக்கச் செயலாகி விடுகிறது. இதுதான் இலங்கையில் பல ஆண்டுகள் நடந்த போரின் நிலையும். எந்தப் பக்கம் நின்று இந்த மோதல் ஆராயப்படுகிறது என்பதைப் பொருத்து, யார் "அமைதிக்கு எதிரான குற்றத்தைப்' புரிந்தனர் என்பது முடிவாகும். அதனால்தான் இக்குற்றத்தைப் பொருத்த வரையில் தீர்ப்பாயம் குறிப்பான குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை.

இருந்தபோதும், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பை உணரும் அதே வேளையில், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைத் தடுக்க, எவ்வித காத்திரமான முன்னெடுப்புகளையும் அது மேற்கொள்ளவில்லை என்பதையும், தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் அது புறந்தள்ளி விட்டது என்பதையும் உணர்கிறது.

போரின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய தார்மீக பொறுப்பை நிறைவேற்றாமல் விட்ட அய்க்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளுக்கு, இத்தீர்ப்பாயம் அந்த பொறுப்பினை வலியுறுத்துகிறது. தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோச மான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக அய்.நா. மனித உரிமைகள் ஆணையமும், அய்.நா. பாதுகாப்பு ஆணையமும் நடந்த கொடுமைகளை விசாரிக்க – ஒரு சுதந்திரமான ஆணையத்தை அமைக்கத் தவறிவிட்டன.

2002இன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அய்ரோப்பிய ஒன்றியம் வலுவிழக்கச் செய்ததையும் இத்தீர்ப்பாயம் முன்னிறுத்துகிறது. ஓர் அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்த நிலையில் – அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அழுத்தத்தின் காரண மாக, தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக்கிய தமிழ்ப் போராட்டக் குழுவினை பயங்கரவாதிகள் இயக்கமென பட்டியலிட அய்ரோப்பிய ஒன்றியம் 2006இல் முடிவெடுத்தது. இந்த முடிவானது, இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து, பாரிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்தது. அதன் விளைவாகவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வித மான மீறல்களும் நடைபெற்றன. அதோடு தமிழர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு போரில், இலங்கை அரசாங்கம் அதன் ஆயுதப் படைகள் ஆகியவற்றின் நடத்தைகளுக்கு ஓர் அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட்டதன் முழு பொறுப்பும் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை' நடத்தும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளையே சாரும் என தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது.

அதோடு, இலங்கை அரசிற்கு ஆயு தங்கள் வழங்கியதில் பல நாடுகளுக்கு நேரடி பொறுப்பு இருப்பதையும் இத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. இதில் சில ஆயுதங்கள் "சில மரபு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தம்' போன்ற பல ஒப்பந்தங்களினால் தடை செய்யப்பட்டுள் ளன. அதோடு இதில் சில நாடுகள், போர் நிறுத்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவப் படையினருக்கு பயிற்சியும் அளித்திருக்கின்றன. 


Pin It