பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும் கவுரவத்தையும் உறுதி செய்து, உலகளாவிய நடைமுறைகளின்படி, அவர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்திக்கவும், சட்டப்பூர்வமாக தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இலங்கை சிறைகளில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகள் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசுக்கு :

da_36 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு போரின் இறுதிக் கட்டங்களில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பிலும் புரிந்த மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க் குற்றங்களையும் விசாரிக்க, உடனடியாக சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, சுதந்திரமான அதிகாரமுடைய "உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்' ஒன்றை அமைத்து, போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தகுந்த தண்டனை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்வதன் மூலமும், 1979இன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலமும் – தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.

 12,000–க்கும் அதிகமான அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும் கவுரவத்தையும் உறுதி செய்து, உலக நடைமுறைகளின்படி, அவர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்திக்கவும் சட்டப்பூர்வமாக தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.

 உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக செயல்படும் தன்மையை உறுதிப்படுத்துவதோடு, அவர்களின் சட்டப்பூர்வமான மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

 அனைத்து துணை ராணுவக் குழுக்களையும் கலைத்துவிட்டு, தமிழ்ப் பகுதிகளில் ராணுவப் படைகளின் இருப்பை குறைக்க வேண்டும்.

 வடகிழக்கின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் தமிழர்களுக்கு செயல்படத்தக்க சட்டப்பூர்வமான பங்கெடுப்பினை வழங்கக் கூடிய அரசியல் அதிகாரப் பங்கீட்டுத் தீர்வை நடைமுறைப்படுத்தி, சம குடியுரிமைக்கு அவர்களுக்கு இருக்கும் உரிமைகளை ஏற்றுக் கொண்டு, அனைத்து நிலைகளிலும் அவர்கள் பங்கெடுக்கவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் வாய்ப்பு வழங்கி, மே 2010இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற உறுதிப்படுத்த வேண்டும்.

 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்படுத்தக்கூடிய "ரோம்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முகாம்களில் உள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை பொருத்தஅளவில் "நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்' கீழ்க்காணுபவற்றை பரிந்துரைக்கிறது :

da_38 அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற மனித நேய அமைப்புகள் – சுதந்திரமாகவும் தடையின்றியும் முகாம்களுக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும்.

 முகாம்களை ராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடனும் பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிர் வாகத்தில், தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

 அய்.நா.வின் “உள்நாட்டில் இடப்பெயர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்'' போன்றவற்றில் கூறப்பட்டுள்ள தரத்தில் – பாதுகாப்பாக திரும்பவும், திரும்புபவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு செயல்களை சுதந்திரமான பன்னாட்டு கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.

 பாதிப்பு குறித்த மதிப்பீடு, மனித ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொண்டு, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து சரியான மதிப்பீட்டிற் குப் பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க, ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.

 பெண்கள், குழந்தைகள், பிரிந்துவிட்ட குடும்பங்கள், அடிப்படை சேவைகள் சென்றடைதல், போருக்குப் பின்னான புனர்வாழ்வு, கல்வி மற்றும் உடல் நலன் மற்றும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தம் மற்றும் மனப்பிறழ்வுக்கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் ஆகியவற்றை குறிப் பாக கவனிக்க வேண்டும்.

உலக சமூகம், நிதியளிக்கும் அரசுகள் மற்றும் அய்க்கிய நாடுகள் அவை ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் :

மேற்கூறப்பட்டவர்கள் கீழ்க்காணுபவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பாயம் கோருகிறது :

மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து, அதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண இலங்கைக்கென அய்.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

போர் நிறுத்த ஒப்பந்த சீர்குலை வுக்கும் அதனைத் தொடர்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிற்கும் உலக சமூகம் எந்த அளவுக்குப் பொறுப் பானது என்பதையும், போர் நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியமை குறித்தும் விசாரிக்க – பொறுப்பான, புகழ்பெற்ற தனி நபர்களை கொண்ட ஒரு சுதந்திரமான குழுவை அமைப்பதற்கு துணை நிற்க வேண்டும்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரி மை கள், சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திரமாக கண்காணிக்க, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

அமைதி மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளையும், கண்ணிவெடி அகற்றல், புனரமைப்பு, தமிழர்களின் விருப்பம் மற்றும் விருப்பத்திற்கேற்ற போருக்குப் பின்னான மறு கட்டமைப்பு ஆகியவற்றிற்கு துணையாக நிதியளிக்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, பன்னாட்டு மற்றும் கூட்டு நடவடிக்கைப் படை ஒன்றை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் நிலைத்த வாழ்விற்கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமானவற்றை அளிக்க வும், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பண்பாட்டுப் பகிர்வு மற்றும் உரையாடல்களுக்கும் வழிவகுக்கக்கூடிய நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டும்.

சுனாமி நிவாரணம் மற்றும் பேரவலத்திற்குப் பின்னான மறு கட்டமைப் புக்காக வழங்கப்பட்ட பன்னாட்டு அவசரகால மற்றும் வளர்ச்சி நிதிகளின் இறுதிப் பயன்பாடு மற்றும் சரியான படியான மறுபகிர்வு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

2010இல் நடக்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க, ஒரு சிறப்பு பன்னாட்டுத் தேர்தல் கண்காணிப் புக் குழுவினை நியமிக்க வேண்டும்.

இலங்கை சிறைகளில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம்

அரசியல் கைதிகள் நேர்மையான

மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

Pin It