பிரதமர் இந்திரா காந்தி மறைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அந்தச் சமயத்தில் ஆட்சி யிலிருந்த காங்கிரஸ் கட்சி நிகழ்த்திய வெறி யாட்டத்தால் சீக்கியர்கள் அந்தக் கட்சியின் மீது நம்பிக்கையை இழந் திருக்கிறார்கள். அன்று காங்கிரஸ் கட்சி நடத்திய அராஜகத்தால் உருவாகிய காயங்கள் இன்றும் சீக்கியர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. ஒவ்வொரு சீக் கியனின் உள்ளத்திலிருந்து எழும்பும் குமுறலையும், வேதனையையும் கேட்கும்போது நம்மை அறியாமலே கண்கள் ஈரமாகி விடுகின்றன.
இந்திராவின் மறைவினால் சோகத்தில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில் பல சீக்கியர்கள் காட்டுமிராண்டித் தனமாகக் கொல்லப்பட்டனர். இரத்தக் கறை படிந்த சாலைகள், பிணங்கள் குவிக்கப்பட்ட வீதிகள் போன்ற காட்சிகள் இந்தியாவின் தலைநகரத்தை ஒரு கொலைநகரமாக காட்டியது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. ஜகதீஷ் டைட்லர், திரு. சஜ்ஜன் குமார் ஆகிய இரு தலைவர் களும் இந்திராவின் மறைவுக்கு பிறகு ஒரு மதத்தினரை இன்னொரு மதத்தினருக்கு எதிராக மோதவிட்டு வேடிக்கைப் பார்த்தார்கள். அவர் களால் அனுப்பப்பட்ட கூலிப் படை யர்கள் கிழக்கு தில்லிப் பகுதியில் வசித்துக் கொண்டிருந்த சீக்கியர்களின் குடும்பங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டினார்கள்.
இந்த இரு தலைவர்களால் நியமிக்கப்பட்ட கூலிப் படையாட்கள், த்ரிலோக்புரி, ஷாத்ரா, ஜகத்புரி, ஜோதி நகர், துர்காபுரி போன்ற இடங்களில் வசித்து வந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சீக்கியர்களின் குடும்பங் களிலுள்ள ஆண்களை வெட்டி அல்லது அடித்து அல்லது எரித்துக் கொன்றார்கள். இளவயது பெண்கள், குடும்பப் பெண்களை வன் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள். 1984ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம், 31ம் தேதி தொடங்கிய வன்முறை சம் பவங்கள் இரண்டு நாட்களுக்கு நீடித்தது. இந்த இரண்டு நாட்களில் 2733 சீக்கியர்கள் பலியானார்கள். 798 சீக்கியப் பெண்மணிகள் வன் பாலு றவுக்கு ஆளானார்கள். இரண்டு நாட் களுக்குப் பிறகு அரசு விழித்துக் கொண்டு 26 குற்றவாளிகளைப் பிடித்து சிறையில் அடைத்தது. ஆனால் அரசால் பிடிக்கப்பட்ட 26 குற்றவாளிகளும் சீக்கியர்களாகவே இருந்தார்கள். சீக்கியர்களே தங் களுடைய இனத்திற்கு எதிராக வன்முறைகளைச் செயல்படுத்தியிருக் கிறார்களா? என்ற கேள்வி ஒவ்வொரு சீக்கியரையும் ஆச்சரியத்திற்குள் ளாக்கியது. குடும்பத்திலுள்ள ஏனைய நபர்களையும் இழந்து ஒற்றை மரமாக நிற்கும் சீக்கியனின் மனதில் பதிந் துள்ள காயத்திற்கு, தற்சமயம் ஆட்சி யிலுள்ள காங்கிரஸ் கட்சி, மருந்து கொடுக்குமென்று சீக்கியர்கள் எதிர் பார்க்கிறார்கள். இந்த நம்பிக்கைக்கு தகுந்த மாதிரி ஆட்சி யாளர்கள் செயல் படவேண்டும். எப்போது காங்கிரஸ் கட்சி இந்த இரண்டு தலைவர்களுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்க முயலுகிறதோ அன்றுதான் எங்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை பிறக்குமென்று என்று வன்முறையால் பாதிக்கப்பட்ட குருப்ரீத் சிங் என்பவர் சொன்னார்.
“என்னுடைய கண் முன்னே என் தந்தை, தாய், உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரையும் ஒரு கணத்தில் வெட்டிக் கொன்றது மட்டுமில்லாமல், மனைவி, திருமணமாகாத சகோதரி, இரண்டு பெண்களையும் கதறக் கதற கற்பழித்தார்கள். இவையெல்லாவற்றையும் ஒரு நடைபிணமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று இந்த வீதி முழுவதும் இரத்தம் ஆறாக ஓடியது, பிணங்கள் வீதி முனையில் குவிக்கப்பட்டு கிடந்தன. இன்னும் அந்த கொடூரமான காட்சி என் னுடைய கண்களை விட்டு அகல வில்லை, அந்த சம்பவத்தை நினைத்து நினைத்து என்னுடைய மனம் வேத னையடைந்து புண்ணாகிவிட்டது. அன்று காவல் துறை கண்களை மூடிக் கொண்டு விட்டது, சட்டமும் கை கொடுத்து உதவ முன்வரவில்லை. திட்டத்தோடு செயல் படுத்தப்பட்ட இந்த அராஜகம் எங்களுடைய வாழ்க்கையோடு விளையாடி விட் டது. எங்களுக்கென்று அன்று எவரும் பாதுகாப்பு கொடுக்க வில்லை. இந்த வீதியில் 50 பிணங்கள். அடுத்த வீதியில் 30 பிணங்கள். அதற்கடுத்த வீதியில் 35 பிணங்கள் என்ற எண் ணிக்கையோடு செயல்பட்ட கூலி யாட்களைத் தடுத்து தண்டனை கொடுப்பதற்கு அன்று காவல்துறை, சட்டம், ஆட்சியிலுள்ள அரசாங்கம் மறுத்து விட்டது. நியாயத்தின் கதவு களை மூடிக் கொண்டு விட்டது. அந்தச் சமயத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய அக்கறையைக் காட்டியது. மேலும் ஜனாதிபதி ஜானி ஜெயில்சிங் என்ன முடிவெடுப்பதென்று தெரியாமல் அதிகாரிகளின், நீதிபதிகளின் அறிவுரைகளை நாடிச் சென்றார். ஒரு நகரமே தீப்பற்றிக் கொண்டு எரிகின்ற போது அறிவுரையும், தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு இது தகுந்த நேரமில்லை என்பதை உணர்ந்தும், மெத்தனமாக செயல்பட்ட மற்ற தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தார்கள்.
“அந்தத் தருணத்தில் ஆட்சியாளர் எவருமே சீக்கியனின் குமுறல்களைக் கேட்கவில்லை, அவனுடைய வேத னையை உணரவில்லை, அன்று அரசாங்கம் கண்ணை மூடிக் கொண்டு விட்டது, காவல் துறை கடமை தவறியது. சட்டம் அழிக்கப்பட்டு விட்டது, இராணுவம் முதலைக் கண்ணீர் வடித்தது. தலைநகரம் பிணக் கிடங்காக மாறிய பிறகு அரசாங்கம் காவல்துறை, இராணுவம் விழித்துக் கொண்டன என்று உஜாகர் சிங் என்பவர் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார்.
பத்து கார்களை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்திக் கொண்டிருந்த பல்தேவ் சிங் என்பவருடைய கார்கள் ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்டன. உயிர் பிழைத்தால் போதுமென்று தில்லி யிலிருந்து தப்பி மீண்டும் பஞ்சாபிற்கு திரும்பினேன். அங்கு நான்கு வருடங்கள் பிச்சை எடுத்து பிழைத்து வந்தேன். பிழைக்க வழியில்லாமல் பஞ்சாபிலிருந்து தில்லிக்கு வந்து மீண்டும் அதே தொழிலைத் தொடங்கினேன். இன்று 40 கார்களுக்கு சொந்தக்காரனாக இருந்தாலும், ஒரு பிச்சைக்காரனாக மாற்றிய 1984ஆம் ஆண்டை என்னால் மறக்கவே முடியாது என்று சொன்ன பல்தேவ் சிங்கின் வார்த்தைகள் அவருடைய மனதில் பதிந்துள்ள காயத்தை வெளிப்படுத்துகிறது.
“கணவனை இழந்து மூன்று பெண்களைப் படிக்க வைத்து திருமண செய்து கொடுப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, இன்றைய உலகில் தனியாக நின்று போராடி குடும்பத்தைக் கரை சேர்க்கும் ஒரு பெண்ணை சாதனையாளர் என்று சொல்லலாம்” என்றார் தரண்ஜித் கௌர். இன்றுவரை எங்களுடைய இழப்பிற்கு நஷ்ட ஈடுத் தொகையும் கைக்கு வந்து சேரவில்லை, அப்படியே வந்தாலும் அந்தப் பணம் எங்களுக்குத் தேவையில்லை. குற்றம் செய்த அந்த இரண்டு தலைவர்களும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்களுக்கு இன்றைய காங்கிரஸ் கட்சி என்ன தண்டனை கொடுக்கப் போகிறது? இதைப் பற்றிக் கேட்டால் இன்றைய இந்தியாவின் பிரதமர் ஒரு சர்தார்ஜி யல்லவா என்று ஒரு பரிகாரத்தைச் சொல்லுகிறது. ஒரு சர்தார்ஜியைப் பிரதமராக்கி, போன 2733 உயிர்களுக்கு காங்கிரஸ் விலை பேசி வியாபாரம் செய்கிறது.
வியாபாரம் பேசி மயக்குவதில் கில்லாடியான காங்கிரஸ் கட்சியின் புத்தியை ஆண்டவனால்கூட திருத்த முடியாது என்று தரண்ஜித் கௌர் சொன்னார். எத்தனையோ பத்திரிகை யாளர்கள் எங்களுடைய சோகக் கதையைக் கேட்டு எழுதியிருக்கிறார் கள். ஆனால் எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல எல்லா வற்றையும் துடைத்துப் போட்டு விட்டு ஒன்றுமே நடக்காதது போல இன்றைய காங்கிரஸ் கட்சி செயல் படுவது வேடிக்கையாக இருக்கிறது. எங்களுடைய வேதனை அவ்வளவு ஏளனமாகி விட்டது என்று வருத்தப் பட்டுக் கொண்டார். இன்று ஆட்சியி லுள்ள காங்கிரஸ் கட்சி குற்றம் செய்தவருக்கு தண்டனையைக் கொடுத்து செயல்படுவது ஒவ்வொரு சீக்கியனின் உள்ளத்திலிருக்கும் ஈரமான புண்ணிற்கு மருந்து கொடுப்பது போலிருக்கும் என்று அந்தப் பகுதியில் வாழும் சீக்கியர்கள் சொன்னார்கள். இதற்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
- சந்தியா கிரிதர்