தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்தும்,அவர்களுடைய முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சட்டநாதன் குழுவும் (1970), அம்பாசங்கர் குழுவும் (1985) அறிக்கைகள் சமர்ப்பித்தன. இவ்விரு குழுக்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒவ்வொரு சாதியினரையும் சந்தித்து, அவர்கள் தரும் விவரங்களை அரசு ஆவணங்களுடன் ஒப்பிட்டு அறிக்கைகளை அளித்துள்ளன. இவ்வறிக்கைகளில் ஒவ்வொரு சாதியினரின் மக்கள் தொகை, அவர்களில் படித்தவர்களின் எண்ணிக்கை, அவர்கள் செய்யும் தொழில்கள், அவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள்,அவர்கள் முன்னேறுவதற்குத் தடைக் கற்களாக இருக்கும் சமூக, பொருளாதார காரணிகள், அவர்களுடைய மனக் குறைகள் ஆகியவற்றைக் கேட்டறிந்து அந்த விவரங்களையும், அச்சமூகத்தினர் முன்னேற அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளப் பரிந்துரைத்தும்அரசிடம் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன.

அக்குழுவினரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி இருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் ஓரளவு முன்னேற்றத்தைக் கண்டிருப்பார்கள். ஆனால் அவ்வறிக்கைகள் பற்றிய விவரங்களைத் தமிழ் நாட்டை ஆண்ட கட்சிகள் வெளியே விடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் /  இருந்தவர்கள் தான் மக்களுக்குத் தொ¢விக்கவில்லை என்றால் எதிர்க் கட்சியாக இருந்தவர்களும் /  இருப்பவர்களும் கூட இவ்விஷயத்தில் தங்கள் எதிர்க் கட்சிகளுடன ஒற்றுமையாக இருந்தனர் / இருக்கின்றனர்.

இக்குழுவினர் பரிந்துரை செய்திருக்கும் பல நடவடிக்கைகள் நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே நடைமுறைப் படுத்தப்படக் கூடியவை. இருப்பினும் இதைப் பற்றி அரசியல் கட்சிகள் அக்கறை கொள்ளவில்லை.

இந்நிலையில் குறைந்த பட்சம் இவ்வறிக்கைகள் மக்களின் தகவலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மதசிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் நெஞ்சம் மாதமிருமுறை இதழின் ஆசிரியர், கலசம்,  சட்டநாதன் குழு, அம்பாசங்கர் குழு அறிக்கைகளும், அவர்களுடைய பரிந்துரைகளும், வகுப்புரிமை பற்றிய முக்கியமான வரலாற்றுச் செய்திகளும் கொண்ட வகுப்புரிமை மலர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளை வென்றெடுக்க விழையும் அனைவருக்கும் இம்மலரில் உள்ள விவரங்கள் உத்வேகத்தையும் பேராற்றலையும் கொடுக்கும். தங்கள் சாதியின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் சாதிச் சங்கங்கள் அனைத்தும் இம்மலரைக் கையில் வைத்தக் கொள்வது அவசியம். சாதிகளுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்த்து, ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதியினரின் முன்னேற்றத்திற்காகப் போராடும் வழியைக் காட்டும் சிறந்த நூல். பிற்படுத்தபட்ட மக்களின் மிக முக்கியமான ஆவணமான இந்நூல் A4 அளவில் 504 பக்கங்களில், நீண்ட காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், நல்ல தரமான காகிதத்தில் பரிசுப் பதிப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நூலின் விலை ரூ 1000/

கிடைக்கும் இடம் - கலசம், 4(11) சி.என்.கே.சந்து, சேப்பாக்கம், சென்னை - 600 005.

நூல் வேண்டுவோர் பணவிடையாகவோ, காசோலையாகவோ, வரைவோலையாகவோ, வங்கி முறியாகவோ, K.S.Ramalingam என்ற பெயருக்கு அனுப்பலாம். பதிப்பாளர் செலவில் (இந்தியாவிற்குள்) பதிவஞ்சலில் நூல் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண் 9444607804.

Pin It