இலைகளை உதிர்த்து வெங்கோடையை
உடுத்திக் கொண்ட வேப்பமரத்தில்
சாயம் வெளுத்த
இளமஞ்சள் நிறத்தில்
சிறுகனியாய் பகல் நிலவு
சாயம் குறையா
உன் நெடும்பிரிவை நினைவூட்டுகிறது

- சதீஷ் குமரன்

Pin It