அச்சுவெல்ல விழியில்
ஒருமுறை தூக்கி
கொஞ்சி விட்டுப்போனாய்
உன் நேசத்தின் வாசனை தேடி
அடர் இரவிலும்
அடர்த்தியாய் நெஞ்சுக்குழியில்
முண்டிக்கொண்டே
உறங்க மறுக்கின்றன
காதலின் நாய்க்குட்டிகள்.

- சதீஷ் குமரன்

Pin It