இறப்புகள் கண்களில்
கணக்கில்லாமல்
நடந்துமுடிந்ததில்
அச்சம் களைந்து வாழ்க்கையின்
பயண தூரம் மழைகொண்ட மலையென
துல்லியமானது
மனிதனின் திடம் எதுவென்று
கணித்துக்கொண்டது காலம்
தைத்துக்கொண்ட முற்களில்
பூக்கள் துளிர்க்கும்
கடப்பதை கற்றுக்கொடுத்தவை
இனி
மெல்ல நடப்பதையும் கற்று கொடுக்கும்

- சன்மது

Pin It