வண்டி வண்டியாய் கொரோனா
அள்ளி போனாலும்
வருஷம் ஒரு காவு நீட்டுக்கு தேவை

வாய்க்கரிசி போட்டு
ஸ்டெதஸ்க்கோப் கனவு செத்து போக
நெஞ்சு நெஞ்சாய் அடித்து அழுவதென்னவோ
அம்மா அப்பா தான்

எத்தனை கத்துவது
எங்கெல்லாம் கத்துவது
மௌனம் உருகும் மொழியின் வேதனை
பின்னிரவுக்கானது

பிணம் தின்னும் அதிகார மத்தியில்
மாற்றி யோசித்தோன் சாகத்தான் வேண்டுமா

சட்டம் திட்டம் வட்டம் மண்ணங்கட்டி
சாவதென்னவோ இல்லாதான் பிள்ளை தான்

கெஞ்சி பார்த்தும் மிஞ்சி பார்த்தும்
மனிதனை அளக்கும் மனிதனுக்கு
மாற்றுரு தான் என்ன

காசுள்ளோன் கோச்சிங் போவான்
காசில்லாதோன் கோபித்துக் கொண்டு சாவான்

அளவுகோல் நீட் என்றால்
மயிருக்கா மற்ற தேர்வு
ஐ ம் டையர்ட்க்கு
இனி அகராதியில் அர்த்தம் எழுதுங்கள்
ஜோதிஸ்ரீ் என்றும்

- யுத்தன்