'வீட்டு வேலைகள் எதுவும்
ஒழுங்காகவே செய்யறதில்ல
உங்க பொண்ணு'
மூக்கை சிந்துகிறாள்
வேலைக்கு போகும் மனைவி!
'நான் செய்யுற வேலைகள்
எதுவும் உன் கண்ணுக்கு தெரியலையா'
வெடிக்கிறாள்
கல்லூரிக்கு செல்லும் மகள்!
எதுவும் செய்யாமல்
முப்பொழுதும் அலைபேசியில்
மூழ்கியவாறு மகன்!
உங்க பஞ்சாயத்த
தீர்க்கவே முடியாதென
படுக்கையறையில்
ஏசியை கூட்டி வைத்து
முடங்கிக் கொள்கிறார் அப்பா!
தலைமுறைகளை
அனாசயமாக தாண்டும்
நிறைவேற்ற முயலாத
சரிவிகிதக் கணக்குகள்!

- பா.சிவகுமார்

Pin It