சுனை பெருகி
வழிந்தோடும் கழுங்குகளில்
எதிர்பாயும் கெழுத்திகள்
அவளுக்குப் பிரியமானவை
கூடை நிறைந்த மீன்களள்ளி
மயில்மூக்கு அரிவளால்
செதில் பிரிப்பாள்
தலையொரு துண்டும்
உடலொரு துண்டுமாக்கி
ஊர்சுற்றும் பேய்களுக்கு
உடலெறிந்து உவகை கொள்வாள்
தலையெல்லாம் சட்டியிட்டு
தாளிக்கத் தாளிக்க
கண்மாய் நிரப்பும் கரநெடியோடு
சாதமகழ்ந்த பெருங்குளத்தில்
தழும்ப ஊற்றும் குழம்புக்குள்
குதித்து குதித்து மரிப்பாள்
வழித்தெடுத்த பானையலசி தெருவிரைக்க
காய்த்திருந்தன கருவேல மரமெங்கும்
கருவாட்டுப் பழங்கள்.

- பூவன்னா சந்திரசேகர்

Pin It