தன்னை விட உயரம்
கொண்ட டெடியை
சுமந்துகொண்ட
தீஷாவிடம்
மகழ்ச்சிக்கான குறுநகைப்பின்
எல்லைக்கோட்டில்
உடைந்துகொண்டது அந்த
வீட்டின் இறுக்கம்

           ***

இடைவெளி

தொடுதிரைக்குள் முளைத்த
கல்விக்குள் தெரிந்துகொண்ட
முகங்களில்
படர்ந்துகொள்கிறது
நாளைய தலைமுறைக்கான
இடைவெளி

- சன்மது

Pin It