கற்களை உரசுகையில்
நெருப்பு உண்டாகியது
ஆனால் கற்கள் எரியவில்லை.

அவைகள்
தம்முடைய நெருப்பால்
மரக் கட்டைகளை எரிப்பதைப்
பார்த்து
ஆச்சரியம் ஏற்பட்டது
அவைகளும்
உருண்டு புரண்டு
நெருப்பின் அருகில் வந்தது..
அதைத் தொட்டது..
இருந்தும்
அவைகள் எரியவில்லை
சூடு மட்டும் உண்டாகி பரவியது.
பிறகு
ஒரு முறை இவைகள்
மிகுதியான மக்களை
எறியப்பட்டு
அடித்ததால்
அவர்களின் உடலிலிருந்து
ரத்தம் வழிந்தது
மற்றும்
காயங்களும் பயங்கரமாக ஏற்பட்டது.
அப்போதும் இவைகள்
கொஞ்சமும் உடையவில்லை
புரிந்து போனது...
அவைகள் இப்போது
ஒரு ஆயுதம் போல மட்டும்
வேலை செய்யும் என்பது.

ஹிந்தியில் : நரேஷ் அகர்வால்
தமிழில் : வசந்ததீபன்

Pin It