நாய்களைப் போலல்ல பூனைகள்,
நாசூக்கானவை.
நாகரிகம் மிக்கவை.

எந்த இடம் கிடைத்தாலும்,
எல்லோரும்பார்க்குமாறு
அவைகள்புணர்வதில்லை.

விழிகள் விரிய,
ரோமங்கள் சிலிர்க்க,
வித்தியாசமான குரலெழுப்பி,
ஓடுகள் மீதும்,
ஒட்டுச் சந்திலும்,
நடுநிசி தாண்டி
கூடும் பூனைகள்,
ஏனோ அறிவதில்லை,
தவித்துப் புரளும்
துணையற்றவர்களின் நிலையை.

- பாலமுருகன் வரதராஜன்

Pin It