அமைதியாய் பார்த்து விட்டு
எனக்கும் சேர்த்து அழுபவள் நீ
எதிர் வீட்டு வெற்று ஜன்னல் நான்

அதிர்ந்து பேசிடாத முத்தங்களை
யாருக்கும் தெரியாமல்
விழுங்கி விடும் உன் கிணற்றடி நீர்

எனக்கான அன்பின் வார்ப்புகளை
உன் ஓட்டையில்லா தோசைகள்
காட்டிக் கொடுக்கின்றன

நமக்கான பார்வைகளை
சமையலறை
டப்பாவாக்கியிருக்கிறாய்
சீனி கடன் கேட்டு வருகையில்
இனிக்கிறேன் நான்

மிச்சம் மீதி புன்னகையை
எப்போதாவதுதான் மொட்டை மாடியில்
காயப் போடுகிறாய்

கத்தித் திரிவது காகம் மட்டுமா என்ன...!

- கவிஜி

Pin It