ஒரே ஊர்
ஒரே பள்ளி
ஒரே வயது
ஒரே வகுப்பு
ஒரே ஆசை
ஒரே எண்ணம்
ஒரே கனவு
ஆனாலும் சேர்ந்தே எரித்தோம் எவருக்கும் தெரியாமல்
ஊருக்கே தெரிந்த தனித்தனியாக
எரிந்து கொண்டிருக்கும் சாதிய சுடுகாட்டில்.
காதல் தீயை.

- சதீஷ் குமரன்

Pin It