தாவணி அணிந்து
தலையெடுக்கும் இமைகளைக்
காவியம் பாடினான்
ஒரு கவி.

காமம் இல்லை
அவை கலையின் படைப்பென்று
ஓவியமாக்கினான்
இன்னொருவன்.

வினாடி விரகம் தீர்க்கவென
விலையைப் பேசினான்
வேறொருவன்.

வாழ்நாள் முழுவதும் வைத்து
அனுபவிக்க விலையாக்கிப் போனான்
மற்றொருவன்.

தற்காலத்தில் நீ கன்னியல்ல "கணிணி "
உனது விருப்பு வெறுப்பு
கருத்துக்கள் நியாயங்கள்
கடமை எல்லை எல்லாம்
ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்டாகி விட்டது
நீ பிறந்து
அதன்படி வாழ்ந்துவிட்டு
இறந்து போய்விடு...!

****

அவசர அவசரமாய்
அடிவயிற்றில் முடிய சிறுநீர்
பத்து நிமிடம் அடக்க முடியாத தருணம்
சட்டென நினைவுபடுத்திவிட்டுப் போனது
தாய்மையை.

- மா-னீ

Pin It