பாலையில் விழுந்த
மழைத்துளியாய்
ஆவியாகிறது என் ஆவல்
இரையுடன் வந்து
குஞ்சுகளில்லா கூட்டைக் காணும் பறவையாய்
நோகிறது என் விழிகள்
பிலத்தினுள் நுழைந்த நீரென
மறைகின்றன
என் சொற்கள்
உயிர்வாயுக் கலமின்றி
விண்ணில் மிதப்பவனாய்
தவிக்கிறது உள்ளம்
அவளில்லாத
அவளிடத்தை காணும்போது
- கா.சிவா