எழுந்ததும் தேநீர் தருகையில்
9 மணிக்கு இட்லி தருகையில்
இடைவேளை தேனீர் தருகையில்
மதியம் ஆட்டுக்கறி குழம்பில்
சோறு தருகையில்
பின் மாலை தேநீர் தருகையில்
இரவுணவுக்கு தோசை தருகையில்
இடையிடையே வீடு பெருக்குகையில்
துணி துவக்கையில்
ஒட்டடை அடிக்கையில்
துணி அயர்ன் செய்கையில்
இடையே தண்ணீர் பிடித்துக் கொள்கையில்
எப்போது அழுதும் கொள்கிறாள் என்று
தெரியவில்லை

காதலியை மனைவியாக்கி கழுத்தறுத்துக்
கொண்டிருக்கிறேன்....

- கவிஜி

Pin It