முதலிய முறைமை முடிவுற வில்லை
அதனால் புரட்சிக்கு அவசரம் இல்லை
என்றே கூறும் போலிக் கட்சிகள்
இன்றைய அபாயமாம் புவிவெப்ப உயர்வைத்
தடுத்திடல் அன்றித் திருப்பிடும் வலிமையும்
கொடுத்திடும் சமதர்மம் என்பதும் மறந்தன
வெருவந்த செய்வோர் தம்மை விரட்டி
வருகென வேண்டும் சமதர்மம் தனையே

 (இன்னும் முதலாளித்துவ முறைமை தனது பணியை முடிக்கவில்லை; அது முடியும் வரை புரட்சிக்கான ஆயத்தம் செய்ய வேண்டிய அவசரம் இல்லை என்று கூறும் போலிப் பொதுவுடைமைக் கட்சிகள், இன்று உலகைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் அபாயமான புவி வெப்ப உயர்வைத் தடுப்பது மட்டும் அல்லாமல், அதைத் திருப்பி விடும் வலிமையையும், சோஷலிச அமைப்பு கொடுக்கும் என்பதையும் மறந்து விட்டன. இவ்வாறு (மக்கள் நலனுக்கு எதிராக நின்று) கொடுமைகளைச் செய்பவர்களை விரட்டிவிட்டு சோஷலிச சமூகத்தை வருக என் வரவேற்க வேண்டும்)

- இராமியா

Pin It