Modi Digital India

சாதிவெறி எல்லாம்
சமூக விதியாக

இரட்டைக் குவளைகள்
காகிதக் குவளைகளாக

சாதி வக்கிரக் கொலைகள்
கவுரவக் கொலைகளாக

பெண் உரிமைகள்
பேருந்து வன்புணர்வுகளாக

பழைய புராணக் குப்பைகள்
விஞ்ஞானங்களாக

பார்ப்பனிய புரட்டுகள்
பாரத வரலாறாக

சாதிவெறியர்கள்
மதவெறியர்கள்
ஆட்சியாளர்களாக

கொள்ளைப் பேர்வழிகள்
பெருமுதலாளிகளாக

டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது
இந்திய இழிவுகள்!

- வீர பாண்டி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.