அடிமை கொள்ளும் சுகத்தைவிடாது
பிடித்துக் கொள்ளும் கயவரின் பகைவன்
ஈயும் அளவிற்குச் செல்வனும் அல்லன்
ஆயினும் மருத்துவக் கொடையைப் பிறர்க்கும்
அளித்து நோய்க்கும் பகைவன் ஆனவன்
ஒளிரும் உலகைக் காணும் வகையில்
அடங்காப் போரின் தத்துவம் கூறும்
·பிடல்காஸ்ட் ரோநல் கலங்கரை விளக்கமே
(அடிமை கொள்ளும் சுகத்தை விட முடியாது என்று அடம் பிடிக்கும் கயவர்களின் பகைவன்; பிறருக்கு அள்ளிக் கொடுக்கும் அளவிற்குச் செல்வந்தனும் அல்லன்; ஆயினும் மற்ற நாட்டு மக்களுக்கு (தங்கள் நாட்டின் உயர்ந்த) மருத்துவத்தை கொடையாய் அளித்து நோய்க்கும் பகைவன் ஆனவன்; (சோஷலிச அரசை அமைப்பதன் மூலம் தான்) ஒளிரும் உலகைக் காண முடியும் என்ற விட்டுக் கொடுக்காத போரின் தத்துவத்தைக் கூறும் ·பிடல் காஸ்ட்ரோ (உலக மக்களுக்கு ஒரு) நல்ல கலங்கரை விளக்கமே.)
- இராமியா