கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

modi mask

அடுத்த ஆண்டே
அவசரச் சட்டமொன்று
அரங்கேறலாம்.
நாட்கட்டிக்குப் பதில்
பஞ்சாங்கமே
பயன்படுத்த வேண்டும்.
புரோகித மந்திரமில்லாமல்
புதுத்துணி கூட
உடுத்த‌க்கூடாது
மரம் வளர்க்கிறீர்களோ இல்லையோ
தர்ப்பைப் புல்லை
வளர்க்க வேண்டும்.
சமஸ்கிருத மந்திரமில்லாமல்
சமையலே செய்யக்கூடாது.
பெண்கள் இனி
பூவென்றால் கூட
தாமரையைத் தான் சூட வேண்டும்.
வீடுகளுக்கு வெள்ளையடிப்பதென்றால் கூட
காவியில் தான்
அடிக்க வேண்டும்.
தவறி விழுந்தால் கூட
தமிழர்கள் தமிழில்
அம்மாவென சொல்லக்கூடாது.
கோவில் இல்லா ஊரில்
யாரும் குடியிருக்கக்கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டம்
என்ற பெயரில்
சாதி மதம் பார்க்காமல்
வாழ்த்துக்களைத் தெரிவித்தால்
மீதிக்காலம் முழுவதும்
சிறையில் வாழ நேரிடும்.