கீற்றில் தேட...

dreamsநான் திரிந்து நாமென்ற ஒற்றைத் திரி
வெளிச்சமாக்கிய இருளை
அகல்விளக்கின் பத்திரத்தோடு
ஒரு கனவிலிருந்து எடுத்து வருகின்றேன்

கையாண்டதின் பிசுபிசுப்பு
ஒட்டிக்கொண்டிருக்கும் ரேகையில்
எண்ணெய் நறுமணம்

வழுக்கும் அத்தனையையும் வாரிக்கொள்ளும் தீவிரம்
காற்றின் இசைக்கு பணியும் சுடரின் அசைவு

ஆடும் பிம்பத்தை ஆட்டுவிக்கும் வெளிச்சம்
அசைய மறுத்து இருள் குடிக்கையில்
கருகிய திரி எழுப்பும் ஞாபக நாசியில்
கனவின் வாசம்

- ரேவா