நாளின் துவக்க நிகழ்வொன்றின் ஆழத்திற்கு
சாளரத்தின் விரல் பிடித்து
இறங்கிக் கொண்டிருகிறேன்.
சன்னமாய் பேசிக் கொண்டிருந்தோம்
வெயிலும் நிழலும், நீயும் நானும்...
வெயில் நீளும் தர்க்கத்தின்
இரு குரலற்று ஒர்குரலாய் மாறிப்போன தருணத்தில்
உயிர் பெற்று விட்டது வெயில்கீற்று..
முற்றுப்புள்ளியற்றதான
ஒருகோண உரையாடலுக்கு நிழலாய்
தலை திருப்பிக் கொள்கிறேன்,
சாளரத்தின் வழி விழிகளை வெளிக்குச் செலுத்த..
நீ பின்னிருந்து விடுத்த வசைச்சொற்கள் மட்டும்
வெயில் கலந்து திட்டு திட்டாய் படிகிறது
சாளரக் கம்பிகளில்..

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.