என்
காயங்களுக்கு உதவாதவை
உன் ஆறுதலும் கவிதைகளும்
என்
கண்ணீருக்குப் போதாதவை
உன் சிறு அரவணைப்பும் கைக்குட்டைகளும்
என்
தொன்றுதொட்டு தொடரும் கவலைகளுக்கு முழுத் தீர்வு வழங்காதவை
உன் பொய்யான அக்கறையும் போலியான சலுகைகளும்
எனினும்
மீண்டும் மீண்டும்
முளைக்கவும்
உயிர்த்தெழவும்
உன்னைவிட எனக்கு நன்றாகவே
சொல்லித்தந்து கொண்டிருக்கின்றாள்
ஓர் ஆதி மனுஷி.
- அமுதாராம் (