முன்னணிப் படையாய் வினைஞர் இருக்கப்
பின்னால் வரவும் தயங்கிய பிறரும்
உழைப்பவர் அரசு அமைந்த காலை
மழையெனப் பொழியும் நலன்களை யாவரும்
தமக்கெனத் துய்த்தலைக் காய்தலின் றேற்கும்
சமதர்ம உணர்வுத் தோழனே வாழ்க

((புரட்சிகரப் போரட்ட காலத்தில்) முன்னணிப் படையாகத் தொழிலாளர்கள் இருந்து போராடும் போது, பின்னால் துணைக்கு வரவும் தயங்கியவர்கள், உழைப்பவர் அரசு அமைந்த பின், மக்களுக்கான நலன்கள் மழை போல் பொழியும் போது அவற்றை (அப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மட்டும் அல்லாது அவர்களுக்குப் பின்னால் துணைக்கு வரத் தயங்கிய) மற்றவர்களும் அனுபவிப்பதை எவ்வித வருத்தமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் சோஷலிச உணர்வு கொண்ட தோழர்கள் வாழியவே)

- இராமியா