கீற்றில் தேட...

ஊசி குத்தும் குளிர்
மரத்து நிற்கும் மரங்கள்
சுவற்றுக்குள் சுருங்கிக் கிடக்கிறது வாழ்வு
அடுப்பில் வெந்து தணியும் துருக்கிக் கோழி
சுடுகல்லில் பரப்பிக் கிடக்கும் ரொட்டி மா
உலையில் அவியும் கிழங்குகள்
நன்கு மசிந்த பருப்பின் வாசம் என
இறுக்கி மூடப்பட்ட சாளரங்களை
ஊடுருவுகின்றன பன்னாட்டு சமையல்கள்
அந்த மேற்கத்திய தேசத்தின்
ஆளில்லா தெருவில்
தனித்து நடக்கையில்
எங்கிருந்தோ காற்றில்
பரவி வருகிறது என்னிடம்
சுட்ட பனம்பழத்தின் வாசம்...

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)