ஒவ்வொரு துண்டாய்
ஒவ்வொரு துண்டாய்
சிதறித்தெறித்த என்னை
நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்

முழுமையாய் மீட்சியுற்று
நிமிர்ந்தெழுகிறேன்  
சகிக்கப் பொறுக்காமல்
மறுபடி உடைக்க
நீளும் உன் கரங்களை
சபிக்கத் தோன்றுவதேயில்லை எனக்கு

சிதறடிப்பது
உன் தொழிலாகவும்
மீட்டெடுப்பது
என் தொழிலாகவும்
நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இவ்வாழ்வில்
புதர்மண்டும் இருளுக்காக
நான் அழுதென்ன ஆகப்போகிறது ?

- க.உதயகுமார்  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.