இந்த நொடியில்
ஏதோ ஒரு இதயம் துயரோடையில் மிதக்கிறது
உலகின் எங்கோ சில கண்கள்
கண்ணீர் மொழிகிறது
எங்கோ ஒரு பூட்டிய அறையில்
தலையணை நனைகிறது
யாரோ ஒருவன் தோட்டத்துப் பூ
நடுங்கி உடலுதிர்க்கிறது
காற்றைப் போல் கண்ணீரும்
எங்கும் இருக்கிறது
பின்னொருநாள் அழுதுகொள்ளலாம்
இவ்விரவு நிம்மதியாய் இருக்கட்டும்
வலியுடை கண்கள்
தூங்கும்படியாய்
ஒரு மென்னிசை பாடேன்
- க.உதயகுமார் (