மகனிடம் வட்டியும் முதலுமாய்
செலுத்தும் ஒப்புதலுடன்தான்
அப்பாவிடம் கடன் வாங்கினோம்
ஒரு சிலருக்குத்தான்
ஓப்புதல்படி திருப்பிசெலுத்தும்
வாழ்க்கை அமைகிறது.
சிலர் முதல் மட்டும்
திருப்பிச் செலுத்துகின்றனர்
சிலர் வாழ்க்கை முழுவதும்
வட்டிமட்டும் செலுத்துகின்றனர்
சிலர் எதையும் செலுத்தமுடியாமல்
சாமியாகிவிடுகின்றனர்
சாமியாகியவனின் மகனின் கண்ணுக்கு
வீதியில் தெரிவோரெல்லாம்
தகப்பன்சாமியாய்
தெரிவதாலோ என்னவோ
ஐயா சாமி என்றபடி
கடனை திருப்பிக்கேட்கிறான்
நாம் அவனை பிச்சைக்காரனென்கிறோம்...!

- வசந்தகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)