உழைக்கும் மக்களின் புரட்சியும் வெல்ல,
பழையதைப் போற்றுவோர் துணையின்றி மறைய,
பொறுமையும் திறமையும் இணைந்தே உழைத்து
வறுமையை விரட்டி வளத்தைப் பெற்றனர்
வழுவிய நிலையில் சமதர்மம் தாழ
தொழுதிடும் இழிவைச் சுமக்கின் றாரே

((சோவியத் நாட்டில்) உழைக்கும் மக்களின் புரட்சி வென்ற பின், (சுரண்டலுக்கு ஆதரவாக இருந்த) பழைய நிலையைப் போற்றுவோர் துணையின்றி மறைந்த பின், பொறுமையும் திறமையும் இணைந்தே உழைத்து, வறுமையை விரட்டி வளத்தைப் பெற்றனர். (இப்பொழுது) வழுவிய நிலையில் சமதர்மம் தாழ, (அந்நியர்களிடம்) தொழுது வாழ்க்கையை நடத்தும் இழிவைச் சுமக்கின்றார்களே.) 

- இராமியா