"தாயே கருமாரி" என L.R.ஈஸ்வரியும் ,
"அங்கே இடிமுழங்குது" என தேக்கம்பட்டி சுந்தர்ராஜனும்
துவங்கி வைக்கிறார்கள் காப்புகட்டுதலை...........
செல்லூர் மல்லிகா மற்றும் வடகரை கனகா கரகாட்டத்துடன்
பூசாரி ஆடிவருகிறார்
சக்திகரகத்துடன் சிவகாசி ராக்கெட்டும்
வடக்கம்பட்டி வேட்டும் வழிநடத்தி வருகின்றன
முளைப்பாரியை.........
சாலமன் பாப்பையா பட்டிமன்றமும்,
அபிநயாவின் ஆடல்பாடலும்,
அங்குசுருதி பாட்டுக் கச்சேரியும்
ஆற்றுப் படுத்துகின்றன வரிகொடுத்த சனங்களை....
ஆட்டுக்கறி குழம்பும், பொங்கச் சோறும்
புதுப்பிக்கின்றன மங்கிய உறவை.........
கல்லோ மண்ணோ
அவசியம் தேவைப்படுகிறது
அம்மனுக்கு ஆடிக் கொடை.
கீற்றில் தேட...
ஆடிக்கொடை
- விவரங்கள்
- ஸ்ரீதர்பாரதி
- பிரிவு: கவிதைகள்