வினைஞர் அரசின் மக்கள் மட்டுமே
அனைத்து வளத்தினைப் பெற்றனர் என்றிலை
வளரும் நாடுகள் சாய்ந்து கொள்ளும்
உளவியல் அரணாய்ப் பணியும் புரிந்ததே
சந்தையின் ஆட்சி வென்று அமைந்தபின்
சொந்த நாட்டின் மக்கள் அல்லாது
உழைக்கும் மக்கள் யாவரும் முயன்று
பழைமையில் பெற்ற உரிமை யாவும்
இழப்பதைக் காண நெஞ்சு துடிக்குதே

(சோஷலிச ஆட்சி இருந்த போது அந்நாட்டின் மக்கள் மட்டுமே அனைத்து வளங்களையும் பெற்றார்கள் என்று கூறிவிட முடியாது. வளரும் நாடுகள் (ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு எதிராகத்) தங்களை பாதுகாக்கும் அரணாகவும் மனமார நினைத்தனர். சந்தையின் ஆட்சி வென்று அமைந்த பின்னால் சொந்த நாட்டு மக்கள் மடடும் அல்லாது (உலகில் உள்ள) உழைக்கும் மக்கள் அனைவரும் பழங்காலத்தில் இருந்து போராடிப் பெற்ற உரிமைகளை இழந்து கொண்டு இருப்பதைக் காண நெஞ்சு துடிக்கின்றதே.)

- இராமியா