மில்லர்!
எதிரியை எரிக்க
நீயே
தீயானாய்.
எதிரியைத் தகர்க்க
நீயே
வெடியானாய்.
எதிரியின்
முனை மழுங்கக்
கூர் தீட்டினாய்.
உன்னை அழித்து
உன்னை
வடித்தாய்.
முடித்து வைப்பதைத்
தொடங்கி
வைத்தாய்.
முடிந்தும்
தொடரும்
வரலாறு ஆனாய்.
எதிர்காலத்தில்
கடந்த காலம் வாழ
நிகழ்காலம் தந்தாய்.
மண் விழிக்க
உன்
உறக்கம்.
- தமிழ்நன் (7299325363,