கீற்றில் தேட...

நீண்ட ஓட்டத்திற்குப் பின்
யார் துரத்தி ஓடினோம்
யாரைத் துரத்தினோம்
என்றறியாதும்....

நான்கிற்கும் மேல் பாதைகள்
பிரியும் இடத்தில
எந்த பாதை எங்கு போகும் என்ற
அறிவிப்பு பலகைகளை
கண்டு திகைத்தும் ...

ஒரு பக்கம் திரும்பிப் போக
எத்தனிக்கையில்
யாரோ இழுத்து பின்
ஏதோ ஒரு  திருப்பத்தில்
திரும்பியும்....

வழியருகே மாறி மாறி வரும்
சோலைகளிலும், பூந்தோட்டங்களிலும்
இளைப்பாற நேரமின்றியும்

இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி
வரும் இந்தத் தெருக்களில்
இன்னமும் ஓடி கொண்டு தான் இருக்கிறேன் ..

இலக்குகளும் மாறி கொண்டே இருக்கின்றன ...

- ஷாஜு